search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவண்ணாமலையில் வருகிற 12-ந்தேதி முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    திருவண்ணாமலையில்வருகிற 12-ந்தேதி முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. 

    இந்த நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளின் கோரிக்கையின் பேரில் இந்த முகாமானது தற்காலிகமாக அதாவது வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாற்றி நடத்திடப்பட உள்ளது.

    மேலும் இம்முகாமில் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு தங்களுக்கு தேவையான மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை புதியதாக பெறுதல் அல்லது புதுப்பித்துக்கொள்ள நேரடியாக விண்ணப்பிக்கலாம். 

    அதனை தொடர்ந்து இச்சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துக் கொள்ளும் அனைத்து மாற்றுத்திறனாளி நபர்களும் தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய சான்றுகளுடன் நேரில் வர வேண்டும். 

    இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அன்றைய தினமே புதிய அட்டை மற்றும் பழைய அட்டை புதுப்பித்து வழங்கப்படும். என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×