என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வருகிற 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 2-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
    • 3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்களில் உற்சவர்கள் வலம் வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.

    இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

    கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    வருகிற 30-ந்தேதி புதன்கிழமை வெள்ளி கற்பக விருட்சகம், வெள்ளி காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.

    வருகிற 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 2-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.

    3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்களில் உற்சவர்கள் வலம் வருகின்றனர்.

    6-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைப்பு
    • இளைஞர்களை வந்தவாசி மக்கள் பாராட்டினர்

    வந்தவாசி:

    வந்தவாசி புதுதெருவில் நாய் ஒன்று குட்டி போட்ட நிலையில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள் உடனடியாக வந்தவாசி மருத்துவரை அணுகி சிகிச்சை அளித்தனர். பின்னர் சென்னை வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அடிபட்ட நாயையும் மற்றும் அதனுடைய குட்டியையும் மீட்டு சென்னை ப்ளூ கிராஸ் மருத்துவமனைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.அந்த நாய்க்கு அங்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மனிதநேயத்துடன் அடிபட்ட நாய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவிய இளைஞர்களை வந்தவாசி மக்கள் பாராட்டினர்.

    • செங்குத்தான மலையில் ஏறி பயிற்சி செய்தனர்
    • ஹெலிகாப்டரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டனர்

    கண்ணமங்கலம்:

    அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமானப்படை வீரர்கள் ஆண்டுதோறும் கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி பகுதியில் உள்ள மலைகளில் மலையேறும் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை ராஜாளி விமானப்படை வீரர்கள் 5-க்கும் மேற்பட்டவர்கள் ஹெலிகாப்டரில் கண்ணமங்கலம் அடுத்த வசந்தபுரம் பகுதிக்கு முதல்முறையாக வந்தனர். தங்கள் பகுதிக்கு வந்த ஹெலிகாப்டரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையற்றனர்.

    பின்னர் விமானப்படை வீரர்கள் வசந்தபுரத்தில் உள்ள செங்குத்தான மலைகளில் மலையேறும் பயிற்சி செய்தனர். இதையடுத்து மாலையில் பயிற்சி முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டரில் அரக்கோணம் நோக்கி சென்றனர்.

    • சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது
    • செவ்வாடை தொண்டர்கள் மூலம் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் மாரியம்மன் கோவிலில் அன்னதான விழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பகல் 12 மணி அளவில் சென்னை தி.நகர் பகுதியை சார்ந்த கிஷோர், ஜோதி, ஸ்ரீராம், அமிர்த ஸ்ரீ லட்சுமி இவர்களின் ஏற்பாட்டின்படி, செவ்வாடை தொண்டர்கள் மூலம் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மன்ற தலைவர் பாலசுப்பிர மணியன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பாலசுப்பிர மணியன், துணை செயலாளர்கள் முருகன், குமரேசன், ஜெயபால், தணிக்கைக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், புரோகிதர் மணி மற்றும் செவ்வாடை தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • 2 ஆண்டுகளாக நிலையில் நிறுத்தியிருந்த தேர்களை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது.
    • துணை சபாநாயகர் பிச்சாண்டி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் இந்த ஆண்டு நடக்கிறது. எனவே, 2 ஆண்டுகளாக நிலையில் நிறுத்தியிருந்த தேர்களை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது.

    அதில், சுப்பிரமணியர் தேர் எனப்படும் முருகர் தேர் பீடத்தின் மேற்பகுதி முற்றிலுமாக புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

    எனவே அதன் உறுதித்தன்மைக்காக வெள்ளோட்டம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

    அதையொட்டி கடந்த 20-ந் தேதி சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் தேர் சீரமைப்பு பணியில் மேலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் குழு அறிவுறுத்தியதால், கடைசி நேரத்தில் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், குறிப்பிட்ட சில பழுதுகள் முற்றிலுமாக சரி செய்யப்பட்டதால் முருகர் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதை தொடர்ந்து இன்று காலை முருகர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. மாட வீதியில் தேர் பவனி வந்தது. துணை சபாநாயகர் பிச்சாண்டி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், நகரச் செயலாளர் கார்த்திக் வேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்சோவில் கைது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    வெம்பாக்கம் அருகே உள்ள பைரவபுரம் கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் சிறுமியுடன் பேசி பழகி வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அந்த சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மாமண்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது அங்கிருந்து அவர்கள் செய்யாறு அரசு பொது மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ மனையில் பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

    இதுகுறித்து மாணவி செய்யாறு மகளிர் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சோனியா வழக்கு பதிவு செய்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இன்றைய ஒரு குடும்ப படம் போலவே செதுக்கப்பட்டுள்ளது
    • சிற்பத்தொகுப்பு முக்கியமான வரலாற்றுச்சான்றாகும்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே படவேடு கேசவபுரம் பகுதியில் கமண்டல நதிக்கரையில் அரசு நிதி உதவி பெறும் நடு நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளிக்கு அருகே காளியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர் அம்மன் சிலை கீழ் உள்ள சிற்ப கல்வெட்டை நேற்று ஆரணியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன், படைவீடு சம்புவராயர் அறக்கட்டளை ஆய்வு மைய முனைவர் அமுல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோவில் கருவறையில் ஒரு சிற்பத்தொகுப்பும், அதன் எதிரே ஒரு நடுகல்லும் இருப்பதை கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அமுல்ராஜ் கூறுகையில்:- கேசவபுரம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள இந்த சிற்பத்தொகுப்பு மிகவும் முக்கியமான வரலாற்றுச்சான்றாகும். இச்சிற்பம் கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வென்று மண்கொண்டான் என்ற ஏகாம்பரநாத சம்புவ ராயரின் பள்ளிப்படை கோவிலாகும். சம்புவராய மன்னர்களில் தனியரசை கி.பி. 1322-ல் அமைத்தவர் வென்று மண் கொண்டான் சம்புவராயர் ஆவார். என்றார்.

    வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் கூறியதாவது:-

    இந்த சிற்பங்கள் வென்று மண்கொண்டானின் பள்ளிப்படை கோவில் சிற்பங்க ளாகும். இச்சிற்பத்தொகுப் பில் மன்னனும் அவரது தேவி யர்களும் வரிசையாக அமர்ந் துள்ளனர்.இது இன்றைய ஒரு குடும்ப படம் போலவே செதுக்கப்பட்டுள்ளது என் பது ஆச்சரியத்தைத் தருகிறது. சுமார் 2 அடி உயரம், 3 அறைஅகலம் கொண்ட கற்பலகை யில் ஒரு அழகிய திருவாசி அலங்கரிக்க, அதன்கீழ் வென்று மண்கொண்டான் கம்பீரமாக சடைமுடித்த கொண்டையுடனும் முகத் தில் அழகான மீசையுடனு மாக அமர்ந்துள்ளார்.

    அவருக்குப் பக்கத்தில் வலப்புறம் இருவரும், இடப்புறம் மூவரு மாக ஐந்து மகளிர் வணங்கிய நிலையில் உள்ளனர். இவர் கள் பட்டத்து ராணியும், துணைவியருமாக இருக்கக்கூ டும். இவர்களுக்கு மேற்புற மாக சாமரம் வீசியபடி ஒரு பணிப்பெண்ணும் அரசனுக் குரிய வெண்கொற்றக் குடை யும் உள்ளன. மேலிரு விளிம் புகளில் வாள் மற்றும் உலகின் கண் மறையாத சூரியனும் இடம்பெற்றுள்ளது.

    மூலவர் அறைக்கு எதிரே, இச்சிற்பத்திற்கு எதிர் திசையில் மூவர் நிற்கும் நடுகல் சிற்பம் ஒன்றுள்ளது. இது மன் னரை அரசியர்கள் வணங்கு வது போல உள்ளது. இப்பள் ளிப்படை சிற்பத்தின் பின் னால், சுதையினால் காளிதே வியின் உருவத்தை அமைத்து, காளியம்மன் கோவில் என தற்போது அழைத்து வருகின்றனர். அக்காலத்தில் மன்னர் வென்று மண்கொண்ட சம் புவராயர் எரியூட்டப்பட்ட இதே இடத்தில்தான் இந்த பள்ளிப்படை கோவிலானது அமைக்கப்பட்டது. இக்கோ வில் காலப்போக்கில் சிதைந்து அழிந்தது.

    இக்கோவிலின் கற்களைக் கொண்டே அருகில் உள்ள அலியாபாத் அணைக்கட்டை 1869-ல் ஆங் கிலேயர்கள் கட்டிமுடித்துள் ளனர் எனக் கருதமுடிகிறது. சோழ அரசர்களின் நம்பிக் கைக்குரிய சிற்றரசர்களாக இருந்த சம்புவராய மன்னர்க ளின் தலைநகரமாக படைந கரமாக இடைக்காலத்தில் சிறப்புற்று இருந்த படைவீட் டில் சம்புவராய மன்னரின் பள்ளிப்படைக் கோவில் எழுப்பப்பட்டிருந்தது என்ப தற்கான முக்கிய வரலாற்று சான்றுகள் தற்போது கண்ட றியப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • வருகிற 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் விழா நாட்களில் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் வழக்கம் போல் மாட வீதியில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
    • கலெக்டர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை புரிந்த அரசு முதன்மைச் செயலாளரும், வணிக வரித்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள மாணவ- மாணவிகள் விடுதிகளில் ஆய்வு பணி மேற்கொண்டார்.

    விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்தும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் முறையாக வழங்கப்படுகிறதா? எனவும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது மாணவிகள் விடுதிக்கு சுற்றுச்சுவர் வேண்டுமென்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டுமென்றும் கேட்டனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். விடுதிகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்தார்.

    மேலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் பாக்யராஜ், ஜீவா மனோகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகாரை கண்டித்து நடந்தது
    • வீடுகளுக்கு சென்று குடிநீர் இணைப்பு குறித்து அதிகாரி ஆய்வு

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் இந்திரவனம், கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் 52 வீடுகளுக்கு ரூ.3 லட்சத்து65 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் முகநூலில் பதிவில் வீடியோவாக பதிவிட்டிருந்தார் இதை அடுத்து அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் நேற்று சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை, தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், முன்னிலை வகித்தார்

    இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் பாரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத், சேத்துப்பட்டு தமிழ்நாடு அனைத்து அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பாபு, மாநில பொறியாளர் பிரிவு தலைவர் மதுசூதனன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திரவனம், கிராமத்தில்திட்டப்பணி ஆரம்பித்த 3 நாட்கள் தான் ஆகிறது.

    மேலும் திட்டத்திற்கான தொகை எதுவும் எடுக்கப்படவில்லை திட்டப்பணி நடைபெற்று தான் வருகிறது.

    இதை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திட்டப் பணி முடிந்து விட்டதாகவும் இதற்கான தொகை எடுத்து விட்டதாகவும் கூறி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார்.

    ஆகவே அவர் மீது புகார் அளித்துள்ளோம் போலீஸ் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

    இதில் வேளாண்மை துறை சத்துணவுத்துறை வருவாய்த்துறை கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊழியர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட துணை செயலாளர் முத்துவேலன், நன்றி கூறினார்.

    முறைகேடு புகார் குறித்து நேற்று மாநில தலைமை பொறியாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் இந்திரவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டம் குறித்து குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் பெயர் விபரம் மற்றும் திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுரேஷ்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கலெக்டரிடம் தளபதி பேரவை தலைவர் அருள்காந்த் மனு
    • தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷிடம் தளபதி பேரவை தலைவர் அருள் காந்த் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தீப திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் மலை சுற்றும் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை செய்து தர வேண்டும், பக்தர்கள் போல் வந்து மர்ம கும்பல் திருட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் போலீசார் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும், பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் , உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு கிரிவல பாதையில் வழங்கப்படும் அன்னதானம் குடிநீர் போன்றவற்றை பரிசோதித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்,தீபம் ஏற்றிய உடன் விரைவாக இல்லம் செல்ல போதுமான போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும், கிரிவலப் பாதையில் முழுவதும் மருத்துவ குழுவி னரை அமைத்து பக்தர்க ளுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டும், பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கு உணவு இருப்பிடம் தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று இரவு துர்க்கையம்மன் உற்சவம் நடந்தது
    • மகாதீப விழா ஏற்பாடுகள் தீவிரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று பிடாரியம்மன் உற்சவம் மாலை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

    மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

    தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெறும்.

    அதன்படி நேற்று துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறுகிறது. அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும்.

    தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    ×