என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடிபட்ட நாயை மீட்ட இளைஞர்கள்
- ப்ளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைப்பு
- இளைஞர்களை வந்தவாசி மக்கள் பாராட்டினர்
வந்தவாசி:
வந்தவாசி புதுதெருவில் நாய் ஒன்று குட்டி போட்ட நிலையில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள் உடனடியாக வந்தவாசி மருத்துவரை அணுகி சிகிச்சை அளித்தனர். பின்னர் சென்னை வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அடிபட்ட நாயையும் மற்றும் அதனுடைய குட்டியையும் மீட்டு சென்னை ப்ளூ கிராஸ் மருத்துவமனைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.அந்த நாய்க்கு அங்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மனிதநேயத்துடன் அடிபட்ட நாய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவிய இளைஞர்களை வந்தவாசி மக்கள் பாராட்டினர்.
Next Story






