சேத்துப்பட்டில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகாரை கண்டித்து நடந்தது வீடுகளுக்கு சென்று குடிநீர் இணைப்பு குறித்து அதிகாரி ஆய்வு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் இந்திரவனம், கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் 52 வீடுகளுக்கு ரூ.3 லட்சத்து65 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் முகநூலில் பதிவில் வீடியோவாக பதிவிட்டிருந்தார் இதை அடுத்து அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் நேற்று சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை, தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், முன்னிலை வகித்தார்

இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் பாரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத், சேத்துப்பட்டு தமிழ்நாடு அனைத்து அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பாபு, மாநில பொறியாளர் பிரிவு தலைவர் மதுசூதனன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திரவனம், கிராமத்தில்திட்டப்பணி ஆரம்பித்த 3 நாட்கள் தான் ஆகிறது.

மேலும் திட்டத்திற்கான தொகை எதுவும் எடுக்கப்படவில்லை திட்டப்பணி நடைபெற்று தான் வருகிறது.

இதை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திட்டப் பணி முடிந்து விட்டதாகவும் இதற்கான தொகை எடுத்து விட்டதாகவும் கூறி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார்.

ஆகவே அவர் மீது புகார் அளித்துள்ளோம் போலீஸ் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

இதில் வேளாண்மை துறை சத்துணவுத்துறை வருவாய்த்துறை கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊழியர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட துணை செயலாளர் முத்துவேலன், நன்றி கூறினார்.

முறைகேடு புகார் குறித்து நேற்று மாநில தலைமை பொறியாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் இந்திரவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டம் குறித்து குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் பெயர் விபரம் மற்றும் திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுரேஷ்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com