என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்
    X

    கலெக்டர் முருகேஷிடம் தளபதி பேரவை தலைவர் அருள்காந்த் மனு அளித்த போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்

    • கலெக்டரிடம் தளபதி பேரவை தலைவர் அருள்காந்த் மனு
    • தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷிடம் தளபதி பேரவை தலைவர் அருள் காந்த் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தீப திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் மலை சுற்றும் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை செய்து தர வேண்டும், பக்தர்கள் போல் வந்து மர்ம கும்பல் திருட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் போலீசார் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும், பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் , உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு கிரிவல பாதையில் வழங்கப்படும் அன்னதானம் குடிநீர் போன்றவற்றை பரிசோதித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும்,தீபம் ஏற்றிய உடன் விரைவாக இல்லம் செல்ல போதுமான போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும், கிரிவலப் பாதையில் முழுவதும் மருத்துவ குழுவி னரை அமைத்து பக்தர்க ளுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டும், பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கு உணவு இருப்பிடம் தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×