என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் பகுதிக்கு ெஹலிகாப்டரில் வந்த விமானப்படை வீரர்கள்
- செங்குத்தான மலையில் ஏறி பயிற்சி செய்தனர்
- ஹெலிகாப்டரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டனர்
கண்ணமங்கலம்:
அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமானப்படை வீரர்கள் ஆண்டுதோறும் கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி பகுதியில் உள்ள மலைகளில் மலையேறும் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜாளி விமானப்படை வீரர்கள் 5-க்கும் மேற்பட்டவர்கள் ஹெலிகாப்டரில் கண்ணமங்கலம் அடுத்த வசந்தபுரம் பகுதிக்கு முதல்முறையாக வந்தனர். தங்கள் பகுதிக்கு வந்த ஹெலிகாப்டரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையற்றனர்.
பின்னர் விமானப்படை வீரர்கள் வசந்தபுரத்தில் உள்ள செங்குத்தான மலைகளில் மலையேறும் பயிற்சி செய்தனர். இதையடுத்து மாலையில் பயிற்சி முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டரில் அரக்கோணம் நோக்கி சென்றனர்.
Next Story






