என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுவிலக்கு காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள காட்சி.
சாராயம், கஞ்சா விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் - போலீசார் அறிவிப்பு
- முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
- புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் திருப்பூர் மாநகர பகுதியில் சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், கஞ்சா பயிரிடுதல், கஞ்சா விற்பனை செய்தல், மதுவிற்பனை போன்ற குற்றங்கள் தொடர்பான புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதுவிலக்கு போலீசார் மாநகர பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






