search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வழிபாடு
    X

    பல்லடம் பெரியகாண்டி அம்மன் கோவிலில் பத்ரகாளி அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம். பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவிலில் அன்னதானம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பல்லடம் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வழிபாடு

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிசேக ஆராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையொட்டி பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவிலில்,சிறப்பு பூஜை மற்றும், அபிசேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல்லடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும், அபிசேக ஆராதனை நடைபெற்றது .இதில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம்,பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பெரியகாண்டியம்மன் கோவிலில், திருக்கல்யாணம், யாகபூஜை, உள்ளிட்டவை நடைபெற்றது .தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல பல்லடம் அங்காளம்மன் கோவில், பொங்காளியம்மன் கோவில், பனப் பாளையம் மாரியம்மன் கோவில், தெற்கு பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    Next Story
    ×