என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
- விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
- வீடியோவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை:
மறைந்த நடிகரும், தே.மு.தி.க. நிறுவனருமான விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதாவையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்று, சமீபத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று, கேப்டன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன்.
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 27, 2024
மேலும், கேப்டன்… pic.twitter.com/5HDW0nGkKR
Next Story






