என் மலர்
சிவகங்கை
இளையான்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே கீழாயூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 55). இவர் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை இளையான்குடி போலீசார் பறிமுதல் செய்து முனியாண்டியை கைது செய்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எலி மருந்தை சாப்பிட்டனர். இதில் தாய் பரிதாபமாக இறந்தார். அவருடைய 2 மகள்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 50). இவருடைய மனைவி தீபா (46) இவர்களுக்கு பிரியதர்ஷினி (24) மஹிமா (21) ஆகிய 2 மகள்கள். இவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.
தீபாவின் கணவர் லட்சுமணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் காரைக்குடி திரும்பினார். பின்னர் லட்சுமணன் தனது மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென்று லட்சுமணன் மாரடைப்பால் இறந்தார். இதனால் தீபாவும், அவர்களது மகள்களும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். உறவினர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தீபா, “தனது 2 மகள்களையும் அழைத்து, உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து எப்படி திருமணம் முடித்து வைக்க போறேன் என்றே தெரியவில்லை. ஆதலால் நாம் 3 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மகள்களும் தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார்கள். இதையடுத்து 3 பேரும் எலிக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு உள்ளனர். சிறிது நேரத்தில் 3 பேரும் வாந்தி எடுத்து உள்ளனர். இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, 3 பேரையும் ஆம்புலன்சில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் தீபா பரிதாபமாக இறந்தார். அவருடைய மகள்களான பிரியதர்ஷினி, மஹிமா ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கையில் லாரிக்கும், காருக்கும் இடையே மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டது. மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிவகங்கை:
சிவகங்கை நகரில் பா.ஜனதாவினர் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அந்த வழியில் செல்லும் வாகனங்களை ஒரே பாதையில் சென்று வர போலீசார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் ரோடு ஓரமாக கார் ஒன்று நின்றிருந்தது. அப்போது நேற்று மதியம் 1 மணி அளவில் தேவகோட்டையை சேர்ந்த தொழிலாளியான சூசை (வயது 50) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவரை முந்தி செல்ல முயன்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் காருக்குள்ளும், பின் சக்கரம் லாரிக்குள்ளும் மாட்டி கொண்டது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் சூசை எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் விபத்தில் சிக்கிய அவரது மோட்டார் சைக்கிளை அகற்ற முடியவில்லை. இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார், மற்றும் பொதுமக்கள் காரை கைகளால் தூக்கி சற்று தள்ளிவைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளை அப்பறபடுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்கள்.

காளையார்கோவில் அருகே வாத்தை காப்பாற்ற சென்ற பள்ளி ஆசிரியர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வந்தவர் பெஞ்சமின். இவர் புலியடிதம்பம் பகுதியில் உள்ள உறவினர் கிணற்றில் விழுந்த வாத்தை கயிற்றைக் கட்டிக்கொண்டு காப்பாற்ற முயன்றுள்ளார். வெற்றிகரமாக வாத்தை விடுவித்த பெஞ்சமின் பின்பு கிணற்றில் இருந்து வெளியே வர முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி மீண்டும் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெஞ்சமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவபணியாளர்களுக்கும், ரத்த தானம் செய்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சமயத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறப்பாக பணியாற்றிய மைக்ரோ பயாலஜி துறையில் பணிபுரிபவர்களுக்கு பாராட்டு விழாவும், மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழாவும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல் முன்னிலை வகித்தார். ரத்த வங்கி (பொறுப்பு) டாக்டர் கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார்.
விழாவில் ரத்த கொடையாளர்கள், சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதே அரசு மருத்துவமனையின் சிறப்பு. அதிலும் குறிப்பாக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறப்பான சேவை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சிவகங்கை மருத்துவ கல்லுாரியில் கடந்த 2 ஆண்டுகளில் ரத்தம் இல்லாமல் யாரும் பாதிக்கப்பட்டதில்லை. அந்த அளவு இந்த மருத்துவமனைக்கு கொடையாளர்கள் மூலம் ரத்தம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 50 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 2 ஆயிரத்து 614 பேர் ரத்த தானம் செய்தள்ளனர்.
இதுபோல் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் உள்ள மைக்ரோபயாலஜி பிரிவில் பணிபுரிபவர்கள் கடந்த 29-4-2020-க்கு பிறகு இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளனர். இது போல் எங்குமே செய்யவில்லை மேலும் மருத்துவமனைக்கு நுரையீரலில் 80 சதவீத தொற்றுடன் வந்தவரை 85 நாட்கள் மருத்துவமனையில் வைத்து முழுமையாக குணப்படுத்தி அனுப்பியுள்ளனர். சிவகங்கை மருத்துவ கல்லூரியில் நர்சிங் கல்லுாரி தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ரத்த தானம் செய்த சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவர்களுக்கும், ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அய்யப்பன், குணசேகரன், மணிகண்டன், உள்பட 40 பேருக்கும் மற்றும் மைக்ரோ பயாலஜி பிரிவில் பணிபுரிந்த டாக்டர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் மற்றம் கேடயத்தை அமைச்சர் வழங்கினார்.
விழாவில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, மருத்துவ அலுவலர் டாக்டர் மீனா, உதவி மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் முகமது ரபி, மீதுன், ரத்த வங்கி டாக்டர் வசந்த், கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தினார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சமையல் செய்து சாப்பிட்டு காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வைகை-பெரியாறு அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், காளையார் கோவில் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள 129 கண்மாய்களுக்கு 5 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படும். இதன்மூலம் 19 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.
கடந்த சில ஆண்டுகளாக பெரியாறு அணை முழு கொள்ளளவை அடைந்த போதும் கடைமடை பகுதியான சிவகங்கை மாவட்டத்திற்கு இதுவரையிலும் உரிய பங்கீட்டு அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக கண்மாய்களில் உள்ள சிறிதளவு தண்ணீரை கொண்டு விவசாயிகள் முதல்கட்ட விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்காக பெரியாறு கால்வாய் பங்கீடு தண்ணீரை திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கீட்டு தண்ணீரை கொடுப்பதாக பெரியாறு பாசன திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் தண்ணீரை வழங்கவில்லை.
இதனால் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தண்ணீர் கிடைக்கும் வரை சமைத்து சாப்பிட்டு விட்டு காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் போராட்டம் தொடங்கியது.
போராட்டத்துக்கு பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அன்வர்பாலசிங்கம், முத்துராமலிங்கம், தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் மற்றும் வக்கீல் கிருஷ்ணன், கார்கண்ணன் சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பொதுப்பணி துறை நிர்வாக பொறியாளர் கமலகண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் பெரியாறு பாசன திட்ட செயற்பொறியாளர் வந்து பேசி தண்ணீர் திறந்தால் மட்டுமே போராட்டம் விலக்கி கொள்ளப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து சாமியானா பந்தல் அமைத்து அதில் அவர்கள் அமர்ந்து இருந்தனர்.
அதன்பிறகு கலெக்டர் ஜெயகாந்தன் போராட்டம் நடத்திய விவசாய பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிடுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். அதை தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து உள்ளனர்.
இளையான்குடியில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில் லட்சுமணன் என்பவரது நிலத்தில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு சென்றார். கிராம நிர்வாக அலுவலரை பார்த்ததும் மணல் அள்ளியவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதன் பின்னர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை கிராம நிர்வாக அலுவலர் பறிமுதல் செய்து இளையான்குடி போலீசில் ஒப்படைத்தார்.
இது குறித்த புகாரின் பேரில் லாரியின் உரிமையாளர் குமாரக்குறிச்சியை சேர்ந்த ராஜசேகரனின் மனைவி தேன்மொழி, முனைவென்றியை சேர்ந்த சரத்குமார், கவுதமன், லட்சுமணன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
சிவகங்கை:
மின்திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள், பொறியாளர் ஆகியோரின் பணிகளை பறிக்க கூடாது. துணை மின்நிலையங்களை பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் வழங்க கூடாது. மின்வாரியத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி பணி உயர்வை அவ்வப்போது வழங்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், மின் வாரியத்தில் பணியாற்றும் மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சிவகங்கையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முருகேசன், கருணாநிதி, இருதயராஜ், உலகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
போராட்டத்தில் கோகுலவர்மன், சுப்பிரமணியன், ஜெயபிரகாஷ், ராஜமாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உமாநாத் நன்றி கூறினார்.
இதனால் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேற்று குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். காரைக்குடி, கோவிலூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கல்லல், தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பகுதியில் உள்ள அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் பல்வேறு தேவைக்கு வந்த பொதுமக்கள் நேற்று பணியாளர்கள் இல்லாததால் திரும்பி சென்றனர். காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஒருசில பணியாளர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மின்கட்டணத்தை செலுத்தினர். மேலும் மின்குறைபாடு பிரச்சினை சம்பந்தமாக புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் திரும்பி சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமீப காலமாக பத்திரப்பதிவு அதிக அளவில் நடைபெற்று வந்தது. நேற்று மாலை திடீர் என லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மன்னன் தலைமையில் ஆய்வாளர் சந்திரன், குமார வேல், சார்பு ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழு பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை செய்ய வந்தனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லாமல் இருக்க அலுவலகத்தை கதவுகளை மூடிவிட்டு சோதனை நடத்தினார்கள். சுமார் 6 மணி நேரம் சோதனை நடந்தது.
துணை கண்காணிப்பாளர் மன்னன் பத்திர பதிவாளர், அலுவலக எழுத்தாளர், அலுவலக பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலக வளாகத்திலும், அலுவலக பணியாளர்களின் வாகனங்களிலும் சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.83,100 பறிமுதல் செய்தனர். இந்த பணம் எவ்வாறு வந்தது என தீவிர விசாரணை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் வேலுசாமி வீட்டு வரி விதிப்புக்கா ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் மற்ற அரசு அலுவலகங்களிலும் சோதனை நடைபெற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி தலைமை அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:
நீதிமன்ற உத்தரவின்படி தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்குள் சம்பள பாக்கி தொகையை முதல் தவணையை பட்டுவாடா செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் ஊழியர்களை நீக்கம் செய்யக்கூடாது. பணி செய்த காலம் முழுவதற்குரிய இ.பி.எப் தொகையை வழங்க வேண்டும். காரைக்குடி பகுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.427 சம்பளம் வழங்க வேண்டும்.
காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் மாரி தலைமை தாங்கினார்.
அகில இந்திய ஓய்வு பெற்றோர் நலச்சங்க மாவட்ட செயலர் சுபேதார் அலிகான் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சி.பி.ஐ) மாவட்ட செயலர் கண்ணகி சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் லால்பகதூர், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் முருகன், கிளைச்செயலர் ஆரோக்கியதாஸ், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மானாமதுரை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ளது சின்னகண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்ட கிருஷ்ணாபுரம், எஸ்.கரிசல்குளம் ஆகிய கிராமத்தில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக சின்னகண்ணனூர் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் சுமார் 350 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த கடையில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 6 மாத காலமாக புழு, வண்டுகளோடு துர்நாற்றம் வீசிய தரமற்ற அரிசியை வினியோகம் செய்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றும் இதேபோல் தரமற்ற அரிசியை வழங்கியதால் ஆத்திரமடைந்த இந்த கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த கடையின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதி கிராம மக்களுக்கு கடந்த 6 மாத காலமாக இந்த ரேஷன் கடையில் புழு மற்றும் வண்டுகள் அதிகளவில் காணப்படும் தரமற்ற அரிசியை இங்குள்ள ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்றனர். இந்த அரிசியை கொண்டு வீட்டில் உணவு ஆக்கினால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த அரிசியால் சமைக்கப்படும் உணவை ஆடு, மாடுகளுக்கு கூட வைக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கடந்த 6 மாத காலமாக இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கூறினால் சரிவர பதில் அளிப்பதில்லை. கிராம மக்கள் போராட்டம் குறித்து தகவலறிந்த மானாமதுரை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் லதாஅண்ணாத்துரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, பாண்டியம்மாள், ஊராட்சி மன்ற தலைவர் அங்குச்சாமி, துணைத்தலைவர் ரவி, தி.மு.க மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியை ஆய்வு செய்தனர்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்து இனிவரும் காலங்களில் தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந்தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
எதிர்பாராத இயற்கை பேரிடா்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுகட்டி நிதியுதவி வழங்குவதன் மூலம், விவசாயிகள் தொடா்ந்து வேளாண்மையில் நிலை நிறுத்துவதற்காக பயிர் காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.831 கோடி விவசாயிகளுக்கு பெற்று வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த மாவட்டத்தில் நடப்பு பருவத்தின் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவராவர்.
மேலும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் வங்கிகளில் பயிர்கடன் பெறும் விவசாயிகள், அவரவா் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு பதிவு செய்து கொள்ளவும், விருப்பமில்லை எனில் காப்பீடு பதிவிலிருந்து விலக்கு பெறுவதற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு படிவத்தை கடன் பெறும் வங்கிகளிலேயே சமா்ப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பயிர்காப்பீடு பதிவிற்கென வழங்கப்பட்டுள்ள சிறப்பு பயிர்காப்பீட்டு அடங்கல் சான்றினை கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்று, அரசால் மானியத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு 324 ரூபாய் 31 பைசா தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள், பொது சேவை மையங்களில் வருகிற 30-ந்தேதி வரை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யும்போது அடங்கல், ஆதார், காப்பீடு பதிவிற்கான விண்ணப்பம், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
காப்பீடு பதிவு செய்யப்படும் வங்கி அல்லது பொது சேவை மையங்களில் அடங்கலில் உள்ள வருவாய் கிராமங்கள், சாகுபடி பரப்பு விவரங்கள், வங்கி கணக்கு எண் முதலான அடிப்படை விவரங்கள் காப்பீடு பதிவேற்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டினை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.மேலும், காப்பீடு பதிவின் ஆவணங்களின் ஒரு நகலினை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு பிரிமியம் செலுத்தி, பதிவு செய்ய வருகிற 30-ந் தேதிவரை காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், ஏதேனும் இயற்கை பேரிடா்கள் ஏற்படும் பட்சத்தில், காப்பீடு பதிவு கால அவகாசத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், விவசாயிகள் கடைசி நேர கூட்ட நெரிசலால் காப்பீடு பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு, காப்பீடு கட்டணம் செலுத்த இறுதி நாள்வரை காத்திருக்காமல், முன் கூட்டியே காப்பீடு பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.