என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வாத்தை காப்பாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் நீரில் மூழ்கி பலி

    காளையார்கோவில் அருகே வாத்தை காப்பாற்ற சென்ற பள்ளி ஆசிரியர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வந்தவர் பெஞ்சமின். இவர் புலியடிதம்பம் பகுதியில் உள்ள உறவினர் கிணற்றில் விழுந்த வாத்தை கயிற்றைக் கட்டிக்கொண்டு காப்பாற்ற முயன்றுள்ளார். வெற்றிகரமாக வாத்தை விடுவித்த பெஞ்சமின் பின்பு கிணற்றில் இருந்து வெளியே வர முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி மீண்டும் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெஞ்சமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×