என் மலர்
சேலம்
- சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது.
- தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் சின்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சத்யா (வயது 29). பட்டதாரியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சத்யாவிற்கு சத்து ஊசியும், வலது கையில் நரம்பு ஊசியும் செலுத்தப்பட்டது. அதன் பிறகு சத்யாவின் வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 12-ந் தேதி சத்யாவின் தந்தை உள்பட சிலர், அரசு மருத்துவமனை டாக்டரை சந்தித்து, முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், அதனால் கண்ணில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறினார். மேலும் டிஸ்சார்ஜ் செய்யுங்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்களை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்யாமல் அங்கேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் 12-ந் தேதி சத்யா கண் பார்வை இழந்து விட்டதாக டாக்டர்களே உறவினர்களிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து 22-ந் தேதி தனியார் மருத்துவமனையில் சத்யா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சத்யாவின் கண்ணை அகற்றியும் விட்டனர்.
இதனால் ஆவேசமடைந்த சத்யாவின் உறவினர்கள், தவறான சிகிச்சை செய்த டாக்டரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நுழைய முயன்றனர். அப்போது, அவர்களை போலீசார் அனுமதிக்காததால் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு, 'எண்ணும் எழுத்தும்' என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 90 ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் 3-ம் பருவ பயிற்சி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், ஒருங்கிணைப்பாளர் முதுநிலை விரிவுரையாளர் நாகலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, வட்டார மேற்பார்வையாளர் திலகவதி ஆகியோர் முன்னிலையில் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
- நேற்று 117.88 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 117.48 அடியாக சரிந்து உள்ளது.
மேட்டூர்:
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 3,641 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 3,483 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நேற்று காலை முதல் நீர்திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 117.88 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 117.48 அடியாக சரிந்து உள்ளது.
- ஆன்லைனில் வேலை தருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்
- வங்கி கணக்கில் ரூ.10,33,729 செலுத்தியுள்ளார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் லோக முனியப்பன். இவரது மனைவி கோதை (வயது 26). கடந்த மாதம் 12-ந் தேதி இவரது செல்போன் வாட்ஸ்அப்பிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ஆன்லைனில் வேலை தருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
அதை உண்மை என்று நம்பிய கோதை, அந்த ஆன்லைன் வேலை கிடைப்பதற்காக பதிவு செய்துள்ளார். மேலும் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.10,33,729 செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி எந்த ஒரு வேலையும் ஆன்லைனில் தராததால் சந்தேகம் அடைந்த கோதை அவர்கள் குறிப்பிட்ட வெப்சைட்டை பார்த்தபோது அது முடக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோதை, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதே போல் சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி அடுத்த மீனகாடு பகுதியைச் சேர்ந்தவர் மதுரையன். இவரது மகன் நடேசன் (36). இவருக்கும் ஆன்லைனில் வேலை தருவதாக வந்த வாட்ஸ் அப் தகவலின் பெயரில், அவர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.13,28,159 செலுத்தியுள்ளார். ஆனால் ஆன்லைன் வேலை எதுவும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, நடேசன் சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார்.இதுகுறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாதம் ரூ.14,000 தொகுப்பூதியம்
- டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்து
சேலம்:
கொரோனா தொற்று காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய சுகாதார குழும மூலம் தமிழகம் முழுவதும் தற்காலிக பணி அடிப்படையில் 2301 நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாகவும், இனி பணி நீட்டிப்பு இல்லை எனவும் தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.இதைத்தொடர்ந்து இரவு வரை போராட்டம் நீடித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை அன்றிரவு போலீசார் கைது செய்தனர்.
3-வது நாளாக போராட்டம் நீடிப்பு
பின்னர் அதிகாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்று 2-வது நாளாக நர்சுகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் நேற்றிரவு மீண்டும் போலீசார் கைது செய்த நிலையில், இன்று 3-வது நாளாக நர்சுகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அவர்கள் கண்களை கட்டிய நிலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களுக்கு தங்களை முன்னுரிமை அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நீட்டிப்பு கேட்டும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது எனவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க, போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலிபிளவர் விளை விக்கப்படுகிறது.
- காலிபிளவர் வரத்து அதிகரிப்பு
அன்னதானப்பட்டி:
சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு, பால் மார்க்கெட், ஆனந்தா காய் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், கோத்தகிரி, ஓசூர், ராயக்கோட்டை, கெலமங்கலம், கர்நாடகா மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதி களில் காலிபிளவர் விளை விக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது.
இதன் காரணமாக ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து, கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் காலிபிளவர் என்பதால் பொதுமக்கள், பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்சமயம் சேலம் மார்க்கெட்டுக்கு காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ ,தற்போது ரூ.10,ரூ.15 , ரூ.20 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது. குழம்பு, பொரியல், மற்றும் காலிபிளவர் சில்லி போட அதிகளவில் விற்பனை ஆகிறது . இன்னும் சிலமாதங்களுக்கு அதிகளவில் வரத்து இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு உத்தரவு
- இந்த பகுதியில் அதிக அளவில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் உள்ளன.
சேலம்:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா மற்றும் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர், அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
அதன்படி, இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில், அஸ்தம்பட்டி போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் நின்று, ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அதிக அளவில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் இருப்பதால் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் போலீசார் அதிக அளவில் நிற்பதை கண்டு பொதுமக்கள் பீதியுடன் சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் பள்ளிகள் அதிகளவில் உள்ளது. குழந்தைகளை காலையில் அவசரமாக பள்ளிக்கு அழைத்து வரும் நேரத்தில், போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் பரிசோதனை என்ற பெயரில் மிரட்டுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்வதற்கு தாமதமாகிறது. எனவே காலை நேரத்தில் ஹெல்மெட் சோதனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
- சேலம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
சேலம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி விசாகப்பட்டி–னம்-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-08569) வருகிற 11-ந் தேதி கொல்லத்தில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு அண்ணாவரம், சாமல்கோட், ராஜமுந்திரி, விஜயவாடா, தெனாலி, நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் (12-ந் தேதி) காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயன்குளம் வழியாக மாலை 6 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோல் கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-08570) வருகிற 12-ந் தேதி கொல்லத்தில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள (13-ந் தேதி) காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வருகிற 14-ந் தேதி விசாகப்பட்டினம் சென்றடையும்.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- பொங்கல் பரிசை சுமூக மாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுத்துள்ளது.
- அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.
சேலம்:
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு உடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்க அரசு உத்தரவிட்டது.
பொங்கல் பரிசை சுமூக மாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.
இதையொட்டி சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1606 ரேஷன் கடைகள் கட்டுப்பாட்டில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட உள்ளது. முழு கரும்பு மற்றும் தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசியுடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்குவதால் அதை வாங்க போட்டி போடும் நுகர்வோரால் கூட்ட நெரிசல் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்படுவதை தடுக்க டோக்கன் முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் மட்டும் வருகை தந்து சிரமம் இன்றி பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் விற்பனையாளர் ,எடையாளர் ஆகியோர் வீடு தேடி சென்று நுகர்வோருக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது .இந்த பணி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது . 9-ம் தேதி முதல் டோக்கனில் குறிப்பிட்டபடி ரேஷன் கடைக்கு சென்று நுகர்வோர் பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம் .
அதிகபட்சம் 4 நாளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . தினசரி நகர பகுதியில் 350 பேருக்கும், ஊரகப்பகுதியில் 250 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 885 கூட்டுறவு சங்கங்கள், 4 மகளிர் சுய உதவிக்குழுக்கள், 45 நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உள்பட்டது என மொத்தம் 935 நியாயவிலைக் கடைகள் மூலம் 5,42,756 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் 675 இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. அரசு ஊழியர்களுக்கான 470 குடும்ப அட்டைகள், சர்க்கரை வாங்கும் 10,543 குடும்ப அட்டைகளுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது.
இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. வீடு, வீடாக சென்று இன்றுமுதல் வருகிற 8-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை நுகர்வோர் பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது. தலா ரூ.1000 வழங்குவதற்கான ரொக்கப் பணம் கூட்டுறவு வங்கிகளில் இருந்து மொத்தமாக பெறப்பட்டு நுகர்வோர்களுக்கு வழங்க சம்மந்தப்பட்ட விற்பனை யாளர்களிடம் பிரித்து வழங்கப்பட இருக்கிறது.
இவை தவிர வேட்டி, சேலைகள் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகம் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்கப்பட உள்ளது. இதனை கண்காணிக்க தாலுகா வாரியாக வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
- நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
- கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
சேலம்:
கொரோனா தொற்று காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய சுகாதார குழும மூலம் தமிழகம் முழுவதும் தற்காலிக பணி அடிப்படையில் 2301 நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாகவும், இனி பணி நீட்டிப்பு இல்லை எனவும் தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து இரவு வரை போராட்டம் நீடித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை அன்றிரவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அதிகாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்று 2-வது நாளாக நர்சுகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் நேற்றிரவு மீண்டும் போலீசார் கைது செய்த நிலையில், இன்று 3-வது நாளாக நர்சுகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களுக்கு தங்களை முன்னுரிமை அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நீட்டிப்பு கேட்டும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது எனவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க, போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
- பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உற்சாக மாக கொண்டாடப்படுகிறது.
- பொங்கல் என்றாலே புது அரிசியும், செங்கரும்பும், வெல்லமும் கூடவே புதுப்பானையும் நினைவுக்கு வரும்.
வாழப்பாடி:
தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி உற்சாக மாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே புது அரிசியும், செங்கரும்பும், வெல்லமும் கூடவே புதுப்பானையும் நினைவுக்கு வரும்.
மாறிவரும் கலாச்சாரத்திற்கேற்ப நகர்ப்புற பெண்கள் மட்டுமின்றி, கிராமப்புற பெண்களும், சமைப்பதற்கு மண் பாண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, இன்டோலியம், எவர் சில்வர் உள்ளிட்ட உலோகத்தாலான நவீன பாத்திரங்களை பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பாராம்பரியத்தை பறைச்சாற்றும் பொங்கல் பண்டிகை வந்து விட்டால், தமிழகம் முழுவதும் குடும்பத்தோடு வார விழா எடுக்கும் அனைத்து தரப்பு மக்களும், தினம்தோறும் புதுப்புது மண் பானைகளில் பொங்கலிட்டு சமைத்து உண்டு மகிழ்வதை மரபு மாறாமல் தொடர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், புதுமண தம்பதியருக்கு பெண் வீட்டு பொங்கல் சீதனமாக புத்தாடை, கரும்பு, நெல் தானியம், மஞ்சள், பாத்திரங்கள் மட்டுமின்றி, நம் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் வண்ண கோலமிட்ட மண் பானைகளையும் பரிசாக வழங்குவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது. இதனால், இந்த நவீன காலத்திலும் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை தருணத்தில் மண் பானைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் கிராமியக் கைத்தொழில், பழங்காலம் தொட்டு இன்றளவிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குலத்தொழிலாகவே இருந்து வருகிறது. நவீன சமையல் பாத்திரங்களின் மீதான மோகம் அதிகரித்து, மண்பாண்டங்களுக்கு வரவேற்பு குறைந்ததால், இச்சமூகத்தை சேர்ந்த தற்கால சந்ததியர், இத்தொழிலை கைவிட்டு மாற்றுத்தொழில், வேலைவாய்ப்பைத் தேடிச் செல்கின்றனர்.
ஆனால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 300 ஆண்டுகளுக்கு மேலாக மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் குலத்தொழிலை கைவிடாமல் இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த கிராமத்தில் விதவிதமான மண் பானைகள் தயாரிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் பானைகள், ஜனவரி முதல் வாரத்தில், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தை மண்பாண்ட கைவினைத் தொழிலாளர்கள் கூறியதாவது:
' பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், முன்னோர்களின் வழியில் பாரம்பரிய முறையில் மண் பாண்டங்கள் தயாரிக்கும் கைத்தொழிலை கைவிடாமல் குலத்தொழிலாக தொடர்ந்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மண் பானைகள் தயாரிப்புத் தொழில் முடங்கிக்கிடந்தது.
கடந்த சில தினங்களாக மழையின்றி வெய்யில் அடித்து வருவதால், பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம். ஓரிரு தினங்களில் பானைகளை சூளையில் வைத்து சுட்டு பதப்படுத்தி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதி வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.
3 மாதங்களாக மழை பெய்து வந்ததோடு, நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி கிடப்பதால், பானைகள் செய்வதற்கு உகந்த களிமண் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மண் பானைகள் உற்பத்தியும், வருவாயும் குறைந்துள்ளது' என்றனர்.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
- நேற்று 118.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 117.81 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 3,942 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 3,641 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர்திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 118.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 117.81 அடியாக சரிந்தது.






