என் மலர்
நீங்கள் தேடியது "பரிசு டோக்கன்"
- பொங்கல் பரிசை சுமூக மாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுத்துள்ளது.
- அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.
சேலம்:
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு உடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்க அரசு உத்தரவிட்டது.
பொங்கல் பரிசை சுமூக மாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.
இதையொட்டி சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1606 ரேஷன் கடைகள் கட்டுப்பாட்டில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட உள்ளது. முழு கரும்பு மற்றும் தலா ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசியுடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்குவதால் அதை வாங்க போட்டி போடும் நுகர்வோரால் கூட்ட நெரிசல் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்படுவதை தடுக்க டோக்கன் முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் மட்டும் வருகை தந்து சிரமம் இன்றி பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் விற்பனையாளர் ,எடையாளர் ஆகியோர் வீடு தேடி சென்று நுகர்வோருக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது .இந்த பணி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறுகிறது . 9-ம் தேதி முதல் டோக்கனில் குறிப்பிட்டபடி ரேஷன் கடைக்கு சென்று நுகர்வோர் பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம் .
அதிகபட்சம் 4 நாளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . தினசரி நகர பகுதியில் 350 பேருக்கும், ஊரகப்பகுதியில் 250 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 885 கூட்டுறவு சங்கங்கள், 4 மகளிர் சுய உதவிக்குழுக்கள், 45 நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உள்பட்டது என மொத்தம் 935 நியாயவிலைக் கடைகள் மூலம் 5,42,756 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் 675 இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. அரசு ஊழியர்களுக்கான 470 குடும்ப அட்டைகள், சர்க்கரை வாங்கும் 10,543 குடும்ப அட்டைகளுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது.
இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. வீடு, வீடாக சென்று இன்றுமுதல் வருகிற 8-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை நுகர்வோர் பெற்றுக் கொள்ளலாம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது. தலா ரூ.1000 வழங்குவதற்கான ரொக்கப் பணம் கூட்டுறவு வங்கிகளில் இருந்து மொத்தமாக பெறப்பட்டு நுகர்வோர்களுக்கு வழங்க சம்மந்தப்பட்ட விற்பனை யாளர்களிடம் பிரித்து வழங்கப்பட இருக்கிறது.
இவை தவிர வேட்டி, சேலைகள் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகம் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்கப்பட உள்ளது. இதனை கண்காணிக்க தாலுகா வாரியாக வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.






