என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

    • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • நேற்று 117.88 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 117.48 அடியாக சரிந்து உள்ளது.

    மேட்டூர்:

    காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 3,641 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 3,483 கன அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நேற்று காலை முதல் நீர்திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 117.88 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 117.48 அடியாக சரிந்து உள்ளது.

    Next Story
    ×