என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • திருமணம் ஆகி 7 மாதங்களே ஆன நிலையில் விபரீதம்
    • சப்- கலெக்டர் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரமணன் மகள் ஈஸ்வரி (வயது 33). இவருக்கும் சென்னையை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. தம்பதிகள் சென்னையில் வசித்து வந்தனர்.

    ஆடி மாதத்தையொட்டி அவரது பெற்றோர் ஈஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஈஸ்வரி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்ட ஈஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று ஈஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 7 மாதங்களே ஆவதால் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் டிராபி வருகிற 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதற்கு முன்பு 2007-ல் சென்னையில் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி நடைபெற்றது. தற்போது 16 வருடங்கள் கழித்து நடைபெறுகிறது .

    இதை தொடர்ந்து 7 - வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் 2023-க்கான கோப்பையை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று அறிமுகம் செய்யும் விழா நடைபெற்று வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜி.கே.உலகப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட கோப்பையை கலெக்டர் வளர்மதி தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கோப்பையை வரவேற்று அறிமுகப்படுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கோ ப்பையை கோலாகலத்துடன் வழிஅனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி மேலாண்மை இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா, ஹரிணி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ராசாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை
    • பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முடிவு

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகே அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு வேளியநல்லூர், பிள்ளைப்பாக்கம், ரெட்டிவலம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று பள்ளிக்கு சைக்கிள் பாகங்களை ஏற்றிவந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளியின் நுழைவு வாயில் மீது மோதியது.

    இதில் சேதம் அடைந்த நுழைவு வாயில் இடிந்து விழும் நிலையில் இருந்தது.

    மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நுழைவு வாயிலை இடிக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முடிவுசெய்யப்பட்டது.

    அதன்படி நேற்று பொக்லைன் எந்திரம் கொண்டு நுழைவு வாயில் இடித்து அப்பு றப்படுத்தப்பட்டது.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் முருகன், மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள் (வயது 28).

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்த தாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இருவருக் கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தம்மாள் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான ஆற்காடு அடுத்த கரிவேடு கிராமத்திற்கு சென்றுள்ளார்.

    நேற்று காலை வீட்டின் அருகே இருந்த விஷத் தழையை அரைத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு லாட புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந் துவிட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி மற்றும் காவேரிப்பா க்கம் ஆகிய வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக் குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தில் 10 சதவிகிதம் பயனாளிகளின் பங்களிப்பு, 60 சதவிகித வங்கிகடன், 30 சதவிகித திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்ப டையில் தொழில்கடன் வழங்கப்பட உள்ளது.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண் தொழிலாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையுள்ள தொழில்திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்திற்கும் மேலான தொழில்திட்டம் சிறு தொழிலாகவும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

    சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.திட்டத்தில் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவிகிதம் மட்டுமே பயனாளி களின் பங்களிப்பாக இருந்தால் போதுமானது.

    இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில்மைய அலுவலர்களை (செல்-9344672756) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் இந்து முன்னணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டிற்கு இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினர்.

    மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்து முன்னணி வழக்கறிஞர் அமைப்பின் மாநில செயலாளர் ரத்தினகுமார் வரவேற்று பேசினார்.

    வேலூர் வி.ஐ.டி. துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயபிரகாஷ் ,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டில் வரவேற்பு குழு வக்கீல்கள் குணசேகர், குமார், தியாகராஜன், சுரேஷ், இந்து முன்னணி நிர்வாகிகள் மகேஷ்,ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்குவாதம் முற்றியதில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 21). இவர் அரக்கோணம் மங்கம்மாபேட்டை கேட் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த புட்டுமணி என்கின்ற மணி (18), ஆகாஷிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆகாஷை குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதனையடுத்து ஆகாஷை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணியை தேடி வருகின்றனர். குற்றவாளியாக ேதடப்பட்டு வரும் மணி பல்வேறு குற்ற சம்பவ வழக்குகளில் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டார்.

    இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ம.க வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி, வாலாஜா அடுத்த மருதாலம் கூட்ரோடு அருகே பா.ம.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது, அவ்வழியாக திருத்தணியில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பஸ் மீது கல்வீசிய சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த டோல்கேட் அருகே கடந்த 16-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 2 கார்களில் 4 டன் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருஷா(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் வளர்மதி,

    குட்கா கடத்தலில் ஈடுபட்ட வர்ஷிராம், பிருஷா ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

    • 14 பேர் காயம்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அடுத்த நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 6 பேர் காஞ்சீபுரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார் நிறுவன பஸ் கார் மீது மோதியது. இதில் கார் முன்பகுதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நிஜாமாபாத்தை சேர்ந்த வெங்கட்ரெட்டி (55) , அவிநாஷ் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவர்களுடன் காரில் பயணித்த பத்ரிநாத் (22), நரசிங் (42), ரமேஷ் (40), கங்காதர் ஆகிய 4 பேரும், பஸ்சில் வந்த 10 ஊழியர்களும் காயம டைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 4 பேரையும், தனியார் நிறுவன பஸ்சில் காயமடைந்த 10 ஊழியர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் வெங்கடரெட்டி, அவிநாஷ் ஆகிய இருவரது உடல்களையும் பிரேத பரிசோ தனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனி நபர்கள் பள்ளி நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளியின் நிறுவனருக்கு கடன் உதவி செய்த தனி நபர்கள் சிலர் தற்போது பள்ளி நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பள்ளியின் நிர்வாகம் மாறினால் தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும்.

    எனவே பள்ளி நிர்வாகத்தை நிறுவனரே தொடர வேண்டும். இல்லையெனில் தங்களின் பிள்ளைகளை பள்ளியை விட்டு விடுவித்து கொள்வோம் எனக்கூறி நேற்று பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் பள்ளி நிறுவனரிடமும், பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் உத்தரவு
    • வருகிற 31-ந் தேதிக்குள் சேர உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    அதன்படி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சிவராமன், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ரவி, நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) க்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல் நெமிலி வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராக பணியாற்றிய பாஸ்கரன், ஆற்காடு வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலகராகவும், அங்கு பணியாற்றிய பிரபாகரன் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய வெங்கடேசன், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ரவிச்சந்திரன் , அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அன்பரசன் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ஜெயஸ்ரீ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நிர்வாக நலன் கருதி பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் சேருமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

    ×