என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் ஆர்.காந்தி ஆசிய ஹாக்கி கோப்பையை பார்வையிட்ட காட்சி.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த ஆசிய ஆக்கி கோப்பைக்கு வரவேற்பு
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
- மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் டிராபி வருகிற 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதற்கு முன்பு 2007-ல் சென்னையில் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி நடைபெற்றது. தற்போது 16 வருடங்கள் கழித்து நடைபெறுகிறது .
இதை தொடர்ந்து 7 - வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் 2023-க்கான கோப்பையை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று அறிமுகம் செய்யும் விழா நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜி.கே.உலகப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட கோப்பையை கலெக்டர் வளர்மதி தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கோப்பையை வரவேற்று அறிமுகப்படுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டையில் முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கோ ப்பையை கோலாகலத்துடன் வழிஅனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி மேலாண்மை இயக்குநர்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா, ஹரிணி, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ராசாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






