என் மலர்
ராணிப்பேட்டை
வீட்டில் மனைவி, குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த கருணாநிதி கடந்த 5-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 33), கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவரது மனைவி சுதா (30). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சுதா, குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் மனைவி, குழந்தை இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த கருணாநிதி கடந்த 5-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருணாநிதி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

ராணிப்பேட்டை பகுதியில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 38). இவர் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில், அரசு மதுபான பாட்டில்களை வாங்கிவந்து, அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். இதேபோல் காரை நேரு நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி (56) என்பவர், அதேப் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார். இவர்கள் 2 பேரையும், ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (41) என்பவர், அதே பகுதியில் உள்ள தனது பெட்டிக்கடையிலும், ராணிப்பேட்டை பழைய அஞ்சல் வீதி பகுதியை சேர்ந்த சண்முகராஜ் (49) வாணாபாடி அருகே உள்ள தனது பெட்டிக்கடையிலும் அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ஆற்காடு அருகே புதுப்பாடி கூட்ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக நபர்களை ஏற்றிவந்த பஸ்சுக்கு அபராதம் விதித்தனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினர் ஆற்காடு அடுத்த குக்குண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மேலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அரசு விதிமுறைகளை மீறி காணப்பட்டது.
எனவே அந்த கம்பெனிக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் புதுப்பாடி கூட்ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக நபர்களை ஏற்றிவந்த பஸ்சுக்கு அபராதம் விதித்தனர்.

ராணிப்பேட்டை பகுதியில் மது விற்ற 4 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா என்ற ஜாக்கம்மா (வயது 32). இவர் அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார். இதேபோல் ராணிப்பேட்டை காரை மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த ராணி (40) என்பவரும் அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து, அதிக விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார். இவர்கள் 2 பேரையும் ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி தமிழன்னை வீதி பகுதியில் கோமதி (40) என்பவரும், அம்மு (35) என்பவரும் அரசு மதுபான பாட்டில்களை வாங்கிவந்து, அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர். இவர்கள் 2 பேரையும் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
ஆற்காட்டில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்காடு தோப்புகானா விளையாட்டு மைதானத்தின் பின்புறமுள்ள முட்புதரில் இருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 36) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 536 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றின் காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 666 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை காரை கூட்ரோடு, பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் வேலூரை சேர்ந்த ஷகில் (வயது 29), பயாஸ் (21) என்பது தெரியவந்தது.
இருவரும் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, ரத்தினகிரி, சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்றால் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 655 பேர் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொற்றால் மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 655 பேர் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த பூண்டி பிராமணர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 31). காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வேலை முடிந்து இரவு வீடு திரும்பியபோது காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே வரும் போது மோட்டார்சைக்கிள் பழுதாகி விட்டது. இதனால் மோட்டார்சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு, மெக்கானிக்கை அழைத்து வர சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து வெங்கடேசன் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப். இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் வாலாஜா டோல்கேட் அருகே உள்ள வாணிச்சத்திரம் பகுதியில் நேற்று அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஆற்காடு அடுத்த அண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (21) என்பதும், வெங்கடேசனின் மோட்டார்சைக்கிளை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 7 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனைச்சாவடி, சிப்காட் பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளேரி, ஆகிய 3 இடங்களில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களை இன்சூரன்சு செய்யாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 73 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் முக கவசம் அணியாமல் வந்த 7 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.