என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 25 ஆயிரம் பயனாளிகளுக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
    • முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு.

    ராணிப்பேட்டை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ஆம் தேதி (திங்கட்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டம்க ன்னிகாபுரத்தில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார்.கடந்த 27-ந் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் வாலாஜா, ஆற்காடு, திமிரி, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய 7 ஒன்றியங்களில் பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

    அதில் தகுதியுள்ள மனுக்களுக்கு தமிழக முதல்வர் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு 100 சதவீதம் தீர்வு காணப்பட வேண்டும்.ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முடிவற்ற பணிகள், அடிக்கல் நாட்டப்பட்ட உள்ள பணிகளில் விவரங்களை விரைந்து தயார் செய்து வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள் நுழையும் வழி, வெளியில் செல்லும் வழி ஆகியவற்றிற்கு வரைபடம் தயாரித்து வழங்கப்பட வேண்டும்.பயனாளிகளை அழைத்து வந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைத்து கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இவர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் பேருந்து ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

    வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை -உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத் துறை, கூட்டுறவுத் துறை, தொழிலாளர் நலத் துறை, வனத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, வேலைவாய்ப்புத் துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் வழங்கப்படும் பயனாளிகளின் விவரங்களை வருகிற 10ஆம் தேதிக்குள் தயார் செய்து கொடுக்க வேண்டும்.ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை ஆட்சியர் அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து வர பெற்றுள்ள விண்ணப்பங்களில் நடவடிக்கைகளை தினமும் கண்காணிக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து 100 சதவீதம் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து துறை உயர் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டு எந்திரங்களை வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை தங்கள் பகுதியிலேயே மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்பு கூட்டும் எந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூடும் எந்திரங்களான பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தல் நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோலுரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் ஆகிய மதிப்பு கூட்டு எந்திரங்களை வாங்க விரும்பும் தனிநபர் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படுகிறது.

    மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார்களை அமைக்கும் திட்டம் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டார்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அமைக்கும் விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 5 எச்.பி., 7.5 எச்.பி. மற்றும் 10 எச்.பி. திறன் உள்ள மோட்டார்கள் விவசாயிகள் தங்களின் கிணறுகளில் கிடைக்கும் நீரின் அளவைப் பொருத்து அமைத்துக் கொள்ளலாம்.

    இந்த இரு திட்டங்களிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.மேலும் விவசாயிகள் அமைக்கும் புதிய ஆழ்துளை கிணறு புதிய மின் மோட்டார் வாங்கி பொருத்த அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

    பழைய ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் இல் உள்ள திறன் குறைந்த மின்மோட்டார் மாற்றுத் திறன் மிகுந்த புதிய பம்பு செட்டுகள் அமைக்கும் அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள், சோலார் பம்பு செட்டுகள் மற்றும் மின் மோட்டார் மானியம் பெற அருகில் உள்ள உப கோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • 10, 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
    • தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    ராணிப்பேட்டை:

    தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    அதனடிப்படையில் இந்த மாதத்தில் வருகிற 10-ந் தேதி, 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளனர்.

    • தனது படிப்பைத் தொடர வேண்டும் என நினைத்த காமாட்சி குழந்தை பிறந்து ஒரு மாத காலத்தில் கல்லூரிக்கு வந்தார்.
    • தன்னை இறுதி ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணவரம் அடுத்த ஆயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காமாட்சி (வயது 20) வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

    அவர் 2-ம் ஆண்டு படித்து வந்த போது, அவருக்கும், தேவஅன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தனது படிப்பைத் தொடர வேண்டும் என நினைத்த காமாட்சி குழந்தை பிறந்து ஒரு மாத காலத்தில் கல்லூரிக்கு வந்தார். இதைக் கண்ட பேராசிரியர்கள் பச்சிளம் குழந்தையை கல்லூரிக்குக் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக காமாட்சி விடுப்பு எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், இறுதி ஆண்டு தேர்வை எழுத காமாட்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பணம் கட்டியதாகக் கூறப்படுகிறது. எனினும், இறுதி ஆண்டுதேர்வுக்கு முந்தைய தேர்வான திருப்புதல்தேர்வில் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை எனவும், தற்போது 2 மாதங்களுக்கு முன்பு இறுதி ஆண்டு தேர்வுக்காக கட்டப்பட்ட கட்டணத் தொகையை பேராசிரியர்கள் திருப்பி வழங்கி, காமாட்சி இறுதியாண்டு தேர்வு எழுத முடியாது எனவும், வருகைப் பதிவேட்டில் குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தன்னை இறுதி ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.

    அவரை பேராசிரியர்கள் சமாதானப்படுத்தியும் அவர் ஏற்காததால் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார், காமாட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில், அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.

    • ரூ. 32 லட்சம் மதிப்பில் கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.
    • இரவு நேரங்களிலும் துல்லியமாக படம்பிடிக்கும் திறனுடையது.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக திருட்டு வழிப்பறி உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு அடையாளம் காண்பதற்காக அனைத்து பகுதிகளிலும் முக்கிய இடங்களில் எச்.டி.வகை அதிநவீன கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்கள், கூட்டுசாலை, தெரு முனை்ப்நி்வாரச்சந்தை, பள்ளி உள்ளிட்ட 120 இடங்களில் நகராட்சி மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 32 லட்சம் மதிப்பில் இந்த கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இவை இரவு நேரங்களிலும் துல்லியமாக படம்பிடிக்கும் திறனுடையது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முக்கிய பகுதிகளில் கேமரா பொருத் தப்படவுள்ள இடங்களில் கம் பம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனை நகராட்சி துணை தலைவர் பழனி, நகராட்சி வார்டு உறுப்பினர் அன்பரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • விண்ணப்பங்கள் தேங்கி நிற்கின்றது.
    • ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

    அரக்கோணம்:

    தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை நிலையச் செயலாளரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான பாலமுருகன் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த காலங்களில் தங்கள் தேவைகளுக்கான கோரிக்கைகளை ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கொடுத்த நிலையில் இன்று வரை விண்ணப்பங்கள் தேங்கி நிற்கின்றது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட பொழுது எந்த ஒரு சரியான பதிலை கூறாமல் ஆசிரியர்களை அலைக்கழித்து வருகின்றனர்.

    குறிப்பாக அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இரண்டு ஆண்டு காலமாக ஆசிரியர்கள் வீடு கட்டுவதற்கு துறைசார்ந்த அனுமதி பெற விண்ணப்பித்து இயக்குனர் அலுவலகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலத்திற்கு கோப்புகள் திருத்தப்பட்டன.

    கோப்புகளை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    இதனால் மீண்டும் முதன்மை கல்வி அலுவலர் வீடு கடன் அனுமதி கோரும் கோப்புகளை உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டாக கடன் பெறும் அனுமதி ஆணை கிடைக்காமல் ஆசிரியர்கள் அலைக்கழிக்க படுகின்றனர்.

    இதைக் கண்டித்து துறை அனுமதி கோரி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூட்டணியை அழைத்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாத நிலையில் வருகிற 10ந் தேதி மாலை 5 மணிக்கு அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் அலுவலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பணி நிமித்தமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம்.
    • முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு சாதா ரணக் கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைமை இடத்துக்கு அருகில் வாலாஜா ரோடு ெரயில் நிலை யம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆயிரக்கணக் கான மக்கள் அலுவல், தொழில் பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    எனவே வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில், தெற்கு ெரயில்வே சார்பில் இயக்கப்படும் அனைத்து விதமான ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்.

    இது குறித்த தீர்மானத்தை மத்திய ெரயில்வே துறை அமைச் சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் தென்னக ெரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க மன்ற அங்கீகாரம் கோரப்பட்டது.

    ஜூன் – 20-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட `புதிய கலெக்டர் அலுவலகம் திறக்க வருகை தரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்க வேண் டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழா நடந்தது
    • சுமார் 250 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பூஜ்ய கழிவுநீர் புதிய சமன்படுத்தப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதனைதொடர்ந்து ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ராணிடெக் தலைவர் ரமேஷ்பிரசாத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஜபருல்லா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் இணை தலைமை பொறியாளர் ராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராணிடெக் பொது மேலாளர் சிவகுமார் உலக சுற்றுச்சூழல் தினவிழா உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தோல் பதனிடும் அங்கத்தினர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொது மேலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.முன்னதாக ராணிடெக் நிலைய வளாகத்தில் 250 மரக்கன்றுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நட்டார்.

    • பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த வன்னிவேடு கிராமத்தை சேர்ந்த வர் பாலு . இவரது மகன் விக் னேஷ் (வயது 24). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மன உளைச்சல் காரணமாக வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலின்பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
    • அன்னமிட்ட கைகளை கிண்ணம் ஏந்த விடுவதா? என கோஷம்

    அரக்கோணம்:

    வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் தமிழக அரசிடம் நீதி கேட்டு நடைபயண போராட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகில் நடைபெற்றது.

    ஒன்றிய தலைவர் கிருபன்கீர்த்தி, செயலாளர் லட்சுமி, பொருளாளர் கோகிலா உள்ளிட்ட சத்துணவு பணி யாளர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அன்னமிட்ட கைகளை கிண்ணம் ஏந்த விடுவதா என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • திருவிழா 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 300-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந் துள்ள திரவுபதியம்மன் கோவிலில் 15 நாட்கள் நடைபெறும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரத்தில் திரவுபதியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காப்புக்கட்டிய ஆண், பெண், குழந்தை என 300-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது.

    • பல்வேறு துறை அதிகரிகள் பங்கேற்பு
    • முகாமில் பல திட்டங்கள் குறித்து ஆலோசனை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் 2021-2022ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் நாளை (செவ்வாய்கிழமை) 35 கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலை துறை, மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பொதுப் பணித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் முகாமில் பட்டா மாற்றம், விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர் கடன் வழங்குதல் மற்றும் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

    அரக்கோணம் தாலுகாவில் தணிகை போளூர், வடமாம்பாக்கம், இச்சிபுத்தூர், பாராஞ்சி, செம்பேடு, கைனூர் ஆகிய இடங்களிலும், ஆற்காடு தாலுகாவில் தாஜ்புரா, மாங்காடு, மேலகுப்பம், ஆயிலம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களிலும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பாணாவரம், கோடம்பாக்கம், புதுப்பட்டு, கர்ணாவூர் ஆகிய பகுதிகளிலும், நெமிலி தாலுகாவில் காட்டுப்பாக்கம், சித்தேரி, அரிகிலப்பாடி, நெல்வாய், சயினாபுரம் ஆகிய கிராமங்களிலும், சோளிங்கர் தாலுகாவில் ஐப்பேடு, பாண்டியநல்லூர், ஜம்புகுளம், கொடைக்கல் மற்றும் திமிரி வட்டாரத்தில் வேம்பி, சென்னசமுத்திரம், வளையாத்தூர், வரகூர், புங்கனூர், காவனூர், துர்கம் மற்றும் வாலாஜா தாலுக்காவில் நவ்லாக், நரசிங்கபுரம், அனந்தலை ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது.

    இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×