என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • முற்றிலும் எரிந்து சேதம்
    • தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    அரக்கோணம்

    அரக்கோணம் பஜார் தோல் ஷாப் பகுதியி–ல் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான பெட்டிகடை ஒன்று இருந்தது. இந்த கடைக்கு மர்ம நபர்கள் நேற்று இரவு தீ வைத்துள்ளனர்.

    தீ மளமளவென எரிந்து கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடைக்கு தீ வைத்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாசில்தாரிடம் வழங்கினர்.
    • தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதி


    அரக்கோணம்:


    அரக்கோணம் அடுத்த மோசூர் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி அரக்கோணம் தாசில்தார் பழனிவேல் ராஜனிடம் மனு கொடுத்தனர்.

    இதை பெற்றுக்கொண்ட தாசில்தார் அதை பரிசீலித்து பூர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். திருநங்கைகள் அவருக்கு நன்றி கூறினர்.

    • அடிக்கடி மனைவியிடம் தகராறு.
    • குடும்பத்தினரை மிரட்ட விஷம் குடித்தார்.

    அரக்கோணம்

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 31) அவரது மனைவி நதியா (30)இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நித்தியானந்தம் குடிக்கு அடிமையாகி குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 4-ந்தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ரகளை செய்த அவர் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.

    அவர் பணம் தராததால் குடும்பத்தினரை மிரட்ட வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடிக்கப்போவதாக நாடகமாடினார். அப்போது திடீரென பூச்சி மருந்தை குடித்தார்.

    அதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    • தூத்துக்குடியில் போட்டி நடைபெற்றது.
    • ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

    நெமிலி:

    தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த திருப்பாற் கடல் பகுதியில் உள்ள எஸ் தேவராஜ் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் கலந்து கொள்ள 12 மாணவர்கள் சென்றனர்.

    இதேபோன்று மதுரை திருச்சி திருநெல்வேலி அரியலூர் ஆகிய மாவட்டங்களில் விளையாட்டுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து சென்ற 12 பேரில் 2 பேர் மாநில அளவில் வெற்றி பெற்றதாக நேற்று அறிவித்தனர்.

    தேவராஜ் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயராகவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் தேவராஜ் ஹாக்கி அகடமி தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
    • மீட்டு பள்ளிக்கு வழங்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான 5.18 ஏக்கர்5.18 ஏக்கர் பரப்பளவு கொண்ட மந்த வெளி நிலத்தை அப்பகுதி அ.தி.மு.க.வை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அதை மீட்டு பள்ளிக்கு வழங்கவும், அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு கொடுத்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்டகலெக் டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • பயிர்களை எலிகள் தாக்காமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளார்.
    • நிலத்தில் வேலி அமைத்த முதியவர் கைது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி, விவசாயி. கடந்தஏப்ரல் மாதம் 10-ந் தேதி காலையில் தனது நிலத்திற்கு மாடு ஓட்டிச் சென்றார்.

    அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கலவை போலீஸ் நிலையத்தில் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து பிச்சாண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தீவிர விசாரணை நடத்தியதில் பிச்சாண்டி மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது.

    பிச்சாண்டியின் பெரியப்பா மூர்த்தி (வயது 62) தனது நிலத்தில் பயிர்களை எலிகள் தாக்காமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளார்.

    அதில் பிச்சாண்டி சிக்கி இறந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 'மூர்த்தியை கைது செய்தனர்.

    • அடிக்கல்நாட்டு விழா நடந்தது.
    • ரூ.25 லட்சத்தில் கட்டும் பணி தொடக்கம்

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சி 1-வது வார்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது.

    இதற்கான அடிக்கல்நாட்டு விழாவிற்கு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் பொன்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.சுந்தர ச் மூர்த்தி, நகர செயலாளர் ஏ.வி.சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் 1-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முன்னா நன்றி கூறினார்.

    • வேம்பு, புங்கை, தேக்கு, கொய்யா, புளி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • கலெக்டர் ஆய்வு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நட சோளிங்கர் அடுத்த கரிக்கல் கிராமத்தில் ஏரிப்பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட வே ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் சவுந்தரராஜன் வரவேற்றனர்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு ஏரிப்பகுதியில் வேம்பு, புங்கை, தேக்கு, கொய்யா, புளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் கூடலூரில் உள்ள சமத்துவபுரத்தில் ரூ.39 லட்சத்தில் சாலை, பூங்கா, குடிநீர் பணிகளையும், அங்கு உள்ள 57 வீடுகள் புதுப்பிக்கப்படும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கூடலூர், ஐப்பேடு பகுதிகளில் 100 நாள் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    • ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி திறந்து வைக்கிறார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவல கம் கட்டப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி திறந்து வைக்கிறார்.

    இந்த நிலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணியை தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் (பொதுப்பணித்துறை) தயானந்த கட்டாரியா நேற்று இரவு ஆய்வு செய்தார்.

    அப்போதுராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், செயற்பொறியாளர் சங்கரலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர்.
    • 7-வது வார்டு சார்பில் விழா.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுகவினர் பல்வேறு இடங்களில் இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    அரக்கோணம் நகரம் 7-வது வார்டில் நகர திமுகவினர் வட்டச் செயலாளர் பாலாஜி தலைமையில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி்னர். இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி, நகர துணைத்தலைவர் அன்பு லாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், பூக்கடை அரி, நகர மாணவரணி அமைப்பாளர் பொன்னரசு, வட்ட பிரதிநிதி சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
    • சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது. சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் பின்புறம் ஜின்னா சாலை முதல் இக்பால் சாலை வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலி, சோலார் மின் விளக்குகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்க இருக்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாமராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, செல்வராஜ், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.பாண்டியன், ஆலங்காயம் பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, அம்மா பேரவை சதீஷ்குமார், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் எம்.ஜி என்கின்ற ஜெய்சங்கர், ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற உறுப்பினர் சையத் சபியுல்லா, ரபீக் அஹமத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
    • நடவடிக்கை எடுக்கபொதுமக்கள் வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ற பிளாஸ்டிக் கவர், டம்ளர், கப் உள்ளிடட் பொருட்களை கலெக்டர் நேரடியாக சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் எதிரில் அப்பகுதி மக்கள் கொட்டியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், மின்சார அலுவலகம் அருகே யோக ஆஞ்ச நேயர் காலனி பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

    இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதே போல புலிவலம் கிராமத்திலும் சாலை ஓரமாக வைக்கப்பட்ட குப்பை தொட்டியில் குப்பைகளை போடாமல் குப்பை தொட்டி அருகே பிளாஸ்டிக் பொருட்களை போட்டு தீ வைத்து மர்ம நபர்கள் எரித்துள்ளனர்.

    குப்பைகளை தீ வைத்து எரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×