என் மலர்
நீங்கள் தேடியது "மின்சாரம் பாய்ந்தது"
- ஐன்னல் கம்பியை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
- அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டாம்பட்டி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராமன் மனைவி சின்னபாப்பா (வயது 42).
பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வந்துள்ளார்.
அப்பொழுது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வரிசையில் நின்று கொண்டிருந்த போது, முன்னால் இருந்த ஐன்னல் கம்பியை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பயிர்களை எலிகள் தாக்காமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளார்.
- நிலத்தில் வேலி அமைத்த முதியவர் கைது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி, விவசாயி. கடந்தஏப்ரல் மாதம் 10-ந் தேதி காலையில் தனது நிலத்திற்கு மாடு ஓட்டிச் சென்றார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கலவை போலீஸ் நிலையத்தில் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து பிச்சாண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தீவிர விசாரணை நடத்தியதில் பிச்சாண்டி மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது.
பிச்சாண்டியின் பெரியப்பா மூர்த்தி (வயது 62) தனது நிலத்தில் பயிர்களை எலிகள் தாக்காமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளார்.
அதில் பிச்சாண்டி சிக்கி இறந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 'மூர்த்தியை கைது செய்தனர்.






