என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரம் துணை மின் நிலையத்தில்   ஆதார் எண் இணைப்பதற்காக   சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது
    X

    பென்னாகரம் துணை மின் நிலையத்தில் ஆதார் எண் இணைப்பதற்காக சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது

    • ஐன்னல் கம்பியை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
    • அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டாம்பட்டி கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராமன் மனைவி சின்னபாப்பா (வயது 42).

    பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வந்துள்ளார்.

    அப்பொழுது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வரிசையில் நின்று கொண்டிருந்த போது, முன்னால் இருந்த ஐன்னல் கம்பியை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×