என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்கள் தருண் மற்றும் மணிகண்டன்
ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
- தூத்துக்குடியில் போட்டி நடைபெற்றது.
- ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.
நெமிலி:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த திருப்பாற் கடல் பகுதியில் உள்ள எஸ் தேவராஜ் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆக்கி போட்டியில் கலந்து கொள்ள 12 மாணவர்கள் சென்றனர்.
இதேபோன்று மதுரை திருச்சி திருநெல்வேலி அரியலூர் ஆகிய மாவட்டங்களில் விளையாட்டுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து சென்ற 12 பேரில் 2 பேர் மாநில அளவில் வெற்றி பெற்றதாக நேற்று அறிவித்தனர்.
தேவராஜ் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயராகவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் தேவராஜ் ஹாக்கி அகடமி தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.






