என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்யக்கூடாது.
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சோகனூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக ராணிபேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    அவருடைய உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரக் கோணம் உதவி கலெக்டர் பாத்திமா மற்றும் அரக்கோணம் தாசில்தார் பழனிரா ஜன் தலைமையிலான வரு வாய்த் துறை அலுவலர்கள் சோகனூர் பகுதியில் உள்ள - சிறுமியின் வீட்டில் இருந்த வர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    அதில் சிறுமிக்கும் 31 வயதுள்ள கேரள மாநிலத்தை-சேர்ந்த நபருக்கும் இன்று மகேந்திரவாடி கோவிலில் திருமணம் நடைபெற இருந்ததும், அதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளதும் தெரிய வந்தது.

    இதனைய டுத்து மாணவிக்கு 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்யக்கூடாது, அப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். சிறுமி தொடர்ந்து படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், மீறி சிறுமிக்கு திருமணம் செய்ய முற் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    • 100 பேருக்கு இயற்கை உர பை வழங்கப்பட்டது.
    • ஏராளமானோர் பங்கேற்பு

    அரக்கோணம்:

    நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 'என் குப்பை என் பொறுப்பு' என்னும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகராட்சியில் தயாரிக்கப்பட்ட இயற்கை உர பை 100 பேருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, நகராட்சி ஆணையர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் நகரமன்ற துணைத்தலைவர் கலாவதி அன்புலா ரன்ஸ், நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் மற்றும் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பெற்றோர் போலீசில் புகார்
    • கைது செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் தயா ளன் (வயது 48). இவர், பள்ளி யில் வேன்டிரைவராக பணி யாற்றி வருகிறார். இந்த நிலையில் வேனில் சென்ற 14 வயது மாணவியிடம் தயாளன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர்ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தயாளனை கைது செய்தனர்.

    • 7-வது மாநிலமாநாட்டில்அனைத்து சாலை பணியாளர்களும் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
    • பெரம்பலூரில் 25, 26-ந்தேதிகளில் நடக்கிறது

    வாலாஜா:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற் குழு கூட்டம் ராணிப் பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார்.

    உட்கோட்ட நிர்வாகிகள் எ.சோமு, எம்.பழனி, தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பா.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் லோ.சிவசங்கரன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில், வருகிற 25,26-ந்தேதிகளில் பெரம்பலூரில் நடைபெறும் சாலை பணியாளர்களின் 7-வது மாநிலமாநாட்டில்அனைத்து சாலை பணியாளர்களும் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    இதில் ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், நெமிலியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

    • பீரோவை உடைத்து மர்ம கும்பல் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). ஓய்வு பெற்ற போலீஸ் காரர். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு யுகானந்தன் (வயது43) என்ற மகன் உள்ளார். அவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே ஒரே வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர். கீழே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேல் தளத்தில் உள்ள வீட்டில் 3 அறைகள் இருக்கின்றன. இதில் ஒரு அறையில் சந்திரனும், சந்திராவும் மற்றொரு அறையில் யுகானந்தனும், கலைச்செல்வியும் . குழந்தைகள் இருவரும் இன்னொரு அறையிலும் தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதால் அந்த அறையில் பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர்கள் அனைவரும் அவர்களது அறைக்கு தூங்கச் சென்றனர். அப்போது காலியாக இருந்த அறையில் உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். புழுக்கம் அதிகமாக இருந்தால் சந்திரன் வெளியே எழுந்து வந்தார்.

    அப்போது வீட்டின் அறையின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் சந்திரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என் குப்பை என் பொறுப்பு என்று வாசகம்
    • சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த நோட்டிசுகள் அகற்றம்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு தூய்மை பணி செய்யும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் பொறுப்பு பழனி தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ஒட்டிகளை அகற்றி அங்கிருந்த குப்பைகளை தூய்மை செய்து பணியை துவக்கி வைத்தார்.

    மேலும் இதில் நகராட்சி ஆணையர் பரந்தாமன் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர் எபினேசன் ஜெயராமன் காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • 3 லட்சம் சதுரடியில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா
    • அமைச்சர் காந்தி தலைமையில் பூமி பூஜை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் வருகின்ற ஜூன் 20-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதையொட்டி பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 லட்சம் சதுரடியில் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா வருகின்ற 20-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருகரங்களால் திறக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட மக்களை சந்தித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இதற்கான அரசு விழா ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைபள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் மாவட்ட செயலாளர்மான ஆர்.காந்தி பூமி பூஜை செய்து பந்தகால் நட்டார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • கையெழுத்து இயக்கம் தொடக்கம்.
    • பாதுகாப்பு குறித்த அவசர தொலைபேசி எண் வெளியிட்டார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் மூலம் சைல்டு லைன் குழந்தை பாதுகாப்பு குறித்த அவசர தொலைபேசி எண் மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தொழிலாளர் துறை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் தனலட்சுமி, சண்முகசுந்தரம், சுகுமார், ஹேண்ட் இன் ஹேண்ட் மேலாளர் மோகனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு கடைபிடிக்கவில்லை
    • எஸ்சி எஸ்டி அமைப்பின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தை கண்டித்து எஸ்சி/எஸ்டி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை பெல் நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது.

    பெல் டிஏவி பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு கடைபிடிக்காததை கண்டித்தும், பாதுகாவல் துறையில் சீனியாரிட்டியை கடைபிடிக்காததை கண்டித்தும், பீரியாரிடிகல் கூட்டத்தை முறைப்படி நடத்தாதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெல் எஸ்சி/எஸ்டி அமைப்பின் பொதுச்செயலாளர் தேவேந்தின், தலைவர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றி பேசினார்கள். முடிவில் அமைப்புச் செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்சி எஸ்டி அமைப்பின் ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • 8 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி
    • வளர்ச்சியைப் பற்றி விளக்கம்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் உப்புக்குளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவுதலைவர் எஸ்.நீலகண்டன் தலைமை தங்கினார். நகரத்தலைவர் என்.வெங்கடேசன் முன்னிலையில் வகித்தார்.

    இதில் 8ஆண்டுகள் ஆட்சி காலத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சியைப் பற்றியும் தெருமுனைப் பிரச்சாரத்தில் விளக்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார். நாராயணன், வேணுகோபால், அனைவரையும் வரவேற்றனர்.

    மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் தனசேகரன், மாவட்ட செயலாளர் ரகுநாத் சிறப்புரையாற்றினார். இறுதியில் நகர பட்டியலின தலைவர் ரவி ஜி, பார்த்திபன் நன்றி கூறினர்.

    • மீன் செல் வரி களஞ்சியத்திலிருந்து பெறப்பட்ட உணர்திறன் வாய்ந்த மீன் செல் கோடுகளைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டது.
    • கொளத்தூரில் உள்ள நீர்வள ஆர்வலர்கள், கோய்கார்ப் வைரசால் நோய் அடிக்கடி ஏற்படுவதாகவும்.

    ராணிப்பேட்டை:

    அலங்கார மீன்களை பாதிக்கும் கோய் ஹெர்பெஸ் வைரஸ் அல்லது சைப்ரினிட் ஹெர்பெஸ் வைரஸ்-3 முதன்முதலில் இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியில் 1998 இல் கண்டறியப்பட்டது.

    "கோய் அல்லது கோய் கெண்டை" என்று அழைக்கப்படும் அலங்கார மீன்கள் இது அதன் வண்ணங்கள், வடிவம் மற்றும் அளவு வடிவத்தின் காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

    இந்த வைரசால் பாதிக்கப்பட்ட மீன்களுக்கு உடல் மேற்பரப்பில் புண்கள், செதில்கள் இழப்பு, உடல் மேற்பரப்பு மற்றும் துடுப்புகளில் ரத்தக்கசிவு, துடுப்புகளின் நசிவு மற்றும் செவுள் நிறமாற்றம் போன்றவை அறிகுறிகள் ஆகும்.

    இந்தியாவில், முதல்முைறயாக தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.சாகுல் ஹமீது தலைமையிலான ஆய்வுக் குழுவால், அலங்கார மீன் வர்த்தகத்தின் மையமான சென்னையில் உள்ள கொளத்தூரில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

    "108 மாதிரிகளில், 57 மாதிரிகள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். இதில் இந்தியாவில் முதன் முறையாக கோர் கார்ப் அலங்கார மீன்களில் வைரஸ் தாக்குதல் கண்டறியபட்டது என்று டாக்டர் ஹமீத் கூறியுள்ளார், அவர் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா ஆகியவற்றின் கீழ் கண்காணிப்பில் ஈடுபட்டார்.

    கொளத்தூரில் உள்ள நீர்வள ஆர்வலர்கள், கோய்கார்ப் வைரசால் நோய் அடிக்கடி ஏற்படுவதாகவும், குளிர்காலத்தில் கடுமையான பொருளாதார இழப்புடன் கடுமையான இறப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

    இந்த வைரஸ்பிசிஆர் மற்றும் மரபணு வரிசைமுறை மூலம் அடையாளம் காணப்பட்டு,மீன் செல் வரி களஞ்சியத்திலிருந்து பெறப்பட்ட உணர்திறன் வாய்ந்த மீன் செல் கோடுகளைப் பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டது.

    "எங்கள் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு ஐசிஏஆர்-நேஷனல் பீரோ ஆஃப் ஃபிஷ் ஜெனடிக் ரிசோர்சஸ், லக்னோ மற்றும் ஐசிஏஆர்-மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம், புவனேஸ்வர் ஆகியவற்றால் சரிபார்க்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

    அமெரிக்காவில் கோய்கார்ப் வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஹமீட் கூறினார்.

    • கலெக்டர் பங்கேற்பு
    • 33 கால யாக பூஜை நடைபெற்றது.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள சித்த புத்த சமேத மண்டபத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவகிரக ஹோமம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் 33 கால யாக பூஜை நடைபெற்றறது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் கோவில் கோபுரத்தில் உள்ள விமானத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் கலெக்டரின் தாய், தந்தை மற்றும் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் , கலவை தாசில்தார் ஷமீம் , கலவை மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

    ×