என் மலர்
நீங்கள் தேடியது "நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்"
- 3 லட்சம் சதுரடியில் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா
- அமைச்சர் காந்தி தலைமையில் பூமி பூஜை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் வருகின்ற ஜூன் 20-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதையொட்டி பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 லட்சம் சதுரடியில் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வருகின்ற 20-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருகரங்களால் திறக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்ட மக்களை சந்தித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதற்கான அரசு விழா ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைபள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் மாவட்ட செயலாளர்மான ஆர்.காந்தி பூமி பூஜை செய்து பந்தகால் நட்டார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.






