என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
    X

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை கலெட்கர் பாஸ்கர பாண்டியன் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

    • கையெழுத்து இயக்கம் தொடக்கம்.
    • பாதுகாப்பு குறித்த அவசர தொலைபேசி எண் வெளியிட்டார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் மூலம் சைல்டு லைன் குழந்தை பாதுகாப்பு குறித்த அவசர தொலைபேசி எண் மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தொழிலாளர் துறை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் தனலட்சுமி, சண்முகசுந்தரம், சுகுமார், ஹேண்ட் இன் ஹேண்ட் மேலாளர் மோகனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×