என் மலர்
ராணிப்பேட்டை
- 14 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
- தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதியில் இந்த மாதம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த 14 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதில் கிராமப் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் நகரப்பகுதியில் 3 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் அரக்கோணம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி (வயது59) உடல் நிலை சரியில்லாதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த மோகன்ராஜ் (32 ) காமராஜ் நகரில் வசித்து வந்தார்.இவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் பகுதியில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு பெரும் வேதனையடைந்துள்ளனர்.
- 20-ந்தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
- விழா மேடை ஏற்பாடு செய்யபட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை வருகின்ற 20-ந்தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி இன்று பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைபள்ளியில் ஜூன்.20ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதையொட்டி பள்ளி மைதானத்தில் விழா மேடை ஏற்பாடு செய்யபட்டுள்ளதையும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கோட்டாட்சியர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், தாசில்தார் ஆனந்தன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- கல்வி நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும்
- 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்
அரக்கோணம்:
தேனியில் ஐசக் தலைமையில் கிறிஸ்தவ மாநாடு நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் பாதுகாப்பதற்காகவும் இந்த மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதம பேராயர் டாக்டர் வி.எஸ்.ஐசக் கலந்துகொண்டு தலைமை ஏற்று பேருரையாற்றினார். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்க வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும்.
கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ் வழங்க வேண்டும். கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் உருவாக்கியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் தரவேண்டும்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு உருவாக்கியுள்ள நலவாரியம் இதில் சாதி அடிப்படையில் பதவிகளை நியமிக்காமல் தகுதி அடிப்படையிலும் தரம் சார்ந்த அடிப்படையிலும் நியமிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
இம்மாநாட்டை மாநில பொதுச்செயலாளர் ரூபன் சரவணகுமார் ஏற்பாடு செய்திருந்தார். பேராயர் எஸ்.எஸ். ஜெபராஜ் பேராயர் டேவிட் குட்டி பேராயர் ஹெரால்டு டேவிட், பேராயர் ஜோயல் மனோகரன் மற்றும் ஜி.சி.சி.ஐ. ேபராயர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சகாதேவசித்தர் கோவிலில் வைகாசி மாத பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் சந்தனம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பல வண்ண மலர்கள், அருகம்புல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் கிராம சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல அடுத்த கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் வைகாசி மாத பிரதோஷம் முன்னிட்டு கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
- கலெக்டர் வழங்கினார்
- மாவட்ட அளவில் நடந்தது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் 5 பேர், கல்லூரி மாணவர்கள் 3 பேர் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாள் அன்று கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழும், திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றிபெற்ற 4 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசு தொகை வழங்கினர். அப்போது தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி உடன் இருந்தார்.
- ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மனு அளித்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என 233 மனுக்கள் பெறப்பட்டது.
அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் துணை கலெக்டர்கள் சேகர், தாரகேஸ்வரி, இளவரசி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.4.4 லட்சம் மதிப்பீல் புதிய சமையலறை கட்டிடம் திறப்பு விழா
- முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கல்மேல்குப்பம் ஊராட்சி கல்புதூர் கிராமத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட
தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி கல்புதூர் கிராமத்தில் ரூ.5.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காரிய மேடை கட்டிடம் கல்மேல்குப்பம் முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கட்டிடம் மற்றும் ரூ.4.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கூட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சகி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் குடிநீர் தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:-
நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்ற போது கூறிய வார்த்தை என்னவென்றால் இது மக்களாட்சி இது நமது ஆட்சி.
இன்று வாக்களிக்காதவர்களும் ஏன் வாக்களிக்கவில்லை என சிந்திக்கும் அளவிற்கு முதல்வர் செயல்பாடுகள் இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் கட்சி பேதம் என்பது கிடையாது. குறிப்பாக அனைத்து மக்களும் பயன்பெறும் அளவில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம் இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார். மற்ற மாநில முதல்வருகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக புதிய திட்டங்களைச் செயல்படுத்துகின்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் மக்களுக்கான பல திட்டங்களை மக்கள் கேட்காமலேயே நிறைவேற்றுவார்.
தற்போது அவர் வழியில் நம்முடைய முதல்வர் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.
இதனைத்தொடர்ந்து மாந்தாங்கல் ஊராட்சியில் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியிணை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கர்,வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 20ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் சிஎம்சி மருத்துவமனை கட்டிடம், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்து பின்னர் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்பது தொடர்பாக ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் – காந்தி தலைமையில் வாலாஜா சுங்கச்சாவடி அருகே திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உற்சாக வரவேற்பு அளிப்பது.
மேலும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக அமையும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமூர்த்தி, என்.ராஜ்குமார், பொருளாளர் மு.கண்ணையன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சண்முகம், சேஷாவெங்கட், அக்ராவரம் முருகன், பெ.வடிவேலு, நகர செயலாளர்கள் பூங்காவனம் தில்லை உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் விரக்தி
- போலீஸ் விசாரித்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் சத்யாநகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயகுமாா் (38) இவா் சோளிங்கரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பனியாளா்களை ஏற்றிசெல்லும் பஸ்சை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்தார்.
இவருக்கும் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சோ்ந்த தீபாவிற்கும் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4-வயதில் தனுஷ்கா என்ற மகளும் ஒன்றரை வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனா்.
2-வது பிரசவத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்ற தீபா இதுவரை கணவா் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த ஜீன் மாதம் 8 -ம் தேதி ஜெயகுமார் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் சென்றார்.
இந்நிலையில் மனைவி தீபா மற்றும் அவரது குடும்பத்தினா் அவர் மீது கிருஷ்ணராஜபுரம் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் போலீசார் ஜெயகுமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெயகுமார் நேற்று நள்ளிரவு இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது படுக்கைஅறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பாணாவரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா்.
- துரியோதனன் படுகளம் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூரில் மகாபாரதசொற் பொழிவு விழா கடந்த மே மாதம் 25-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது.
அதில் பகலில் மகாபாரத சொற் பொழிவும், இரவில் வளைப்பு, ராஜ சுய யாகம், பகடை துயில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது உள்ளிட்டகட்டை கூத்து நாடகமும் நடந்தது. இறுதி நாளான நேற்று காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது.
விழாவில் திருமால்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற் பட்ட போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், மருத்துவத்துறையினர் மற்றும் மின்வாரியத்துறையினர் பங்கேற்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- 2 பவுன் தாலி செயினை பறித்து சென்றார்.
- வாகன சோதனையில் சிக்கினார்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா போலீசார் நேற்று காலை ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கூட்ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் சுரேஷ் (வயது 20) என தெரிய வந்தது. அவர் கடந்த மே மாதம் 23-ந்தேதி ஆற்காட்டில் இருந்து ஆரணியை நோக்கி பைக்கில் சென்ற தம்பதியரை வழி மடக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலி செயினை பறித்ததாக கூறினார்.
மேலும் அதே பகுதியில் வேறு ஒருவரிடம் 5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செஞ்சிபனப்பாக்கம்-மணவூர் இடையே பிணம் மீட்பு
- போலீசார் விசாரணை.
அரக்கோணம்:
சென்னை திருவொற்றியூர் வடுகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 49), கூலித்தொழிலாளி. இவர், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்தார்.
அந்த ரெயில் அரக்கோணம் மார்கத்தில் செஞ்சிபனப்பாக்கம்-மணவூர் ரெயில் நிலையங்க ளுக்கு இடையே வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து நாகராஜ் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் நாகராஜ்ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியாகி கிடப்பதாக அரக்கோணம்ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






