என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sent to Government Hospital for autopsy."

    • செஞ்சிபனப்பாக்கம்-மணவூர் இடையே பிணம் மீட்பு
    • போலீசார் விசாரணை.

    அரக்கோணம்:

    சென்னை திருவொற்றியூர் வடுகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 49), கூலித்தொழிலாளி. இவர், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்தார்.

    அந்த ரெயில் அரக்கோணம் மார்கத்தில் செஞ்சிபனப்பாக்கம்-மணவூர் ரெயில் நிலையங்க ளுக்கு இடையே வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து நாகராஜ் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் நாகராஜ்ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியாகி கிடப்பதாக அரக்கோணம்ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×