என் மலர்
நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை"
- ரூ.4.4 லட்சம் மதிப்பீல் புதிய சமையலறை கட்டிடம் திறப்பு விழா
- முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கல்மேல்குப்பம் ஊராட்சி கல்புதூர் கிராமத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட
தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி கல்புதூர் கிராமத்தில் ரூ.5.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காரிய மேடை கட்டிடம் கல்மேல்குப்பம் முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கட்டிடம் மற்றும் ரூ.4.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கூட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சகி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் குடிநீர் தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:-
நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்ற போது கூறிய வார்த்தை என்னவென்றால் இது மக்களாட்சி இது நமது ஆட்சி.
இன்று வாக்களிக்காதவர்களும் ஏன் வாக்களிக்கவில்லை என சிந்திக்கும் அளவிற்கு முதல்வர் செயல்பாடுகள் இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் கட்சி பேதம் என்பது கிடையாது. குறிப்பாக அனைத்து மக்களும் பயன்பெறும் அளவில் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம் இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார். மற்ற மாநில முதல்வருகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக புதிய திட்டங்களைச் செயல்படுத்துகின்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் மக்களுக்கான பல திட்டங்களை மக்கள் கேட்காமலேயே நிறைவேற்றுவார்.
தற்போது அவர் வழியில் நம்முடைய முதல்வர் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.
இதனைத்தொடர்ந்து மாந்தாங்கல் ஊராட்சியில் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியிணை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கர்,வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






