என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christian State Conference"

    • கல்வி நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும்
    • 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்

    அரக்கோணம்:

    தேனியில் ஐசக் தலைமையில் கிறிஸ்தவ மாநாடு நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் பாதுகாப்பதற்காகவும் இந்த மாநாடு நடைபெற்றது.

    இம்மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரதம பேராயர் டாக்டர் வி.எஸ்.ஐசக் கலந்துகொண்டு தலைமை ஏற்று பேருரையாற்றினார். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்க வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும்.

    கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ் வழங்க வேண்டும். கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் உருவாக்கியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் தரவேண்டும்.

    கிறிஸ்தவ தேவாலயங்கள் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு உருவாக்கியுள்ள நலவாரியம் இதில் சாதி அடிப்படையில் பதவிகளை நியமிக்காமல் தகுதி அடிப்படையிலும் தரம் சார்ந்த அடிப்படையிலும் நியமிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

    இம்மாநாட்டை மாநில பொதுச்செயலாளர் ரூபன் சரவணகுமார் ஏற்பாடு செய்திருந்தார். பேராயர் எஸ்.எஸ். ஜெபராஜ் பேராயர் டேவிட் குட்டி பேராயர் ஹெரால்டு டேவிட், பேராயர் ஜோயல் மனோகரன் மற்றும் ஜி.சி.சி.ஐ. ேபராயர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×