என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னுக்கு பின் முரணாக பதில்"

    • 2 பவுன் தாலி செயினை பறித்து சென்றார்.
    • வாகன சோதனையில் சிக்கினார்.

    ஆற்காடு

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா போலீசார் நேற்று காலை ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கூட்ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் சுரேஷ் (வயது 20) என தெரிய வந்தது. அவர் கடந்த மே மாதம் 23-ந்தேதி ஆற்காட்டில் இருந்து ஆரணியை நோக்கி பைக்கில் சென்ற தம்பதியரை வழி மடக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலி செயினை பறித்ததாக கூறினார்.

    மேலும் அதே பகுதியில் வேறு ஒருவரிடம் 5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×