என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிபேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி அமைச்சர் காந்தி தலைமையில்– ஆலோசனைக் கூட்டம் நடந்த காட்சி.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ராணிபேட்டையில் ஆலோசனைக் கூட்டம்
- அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 20ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். அவர் சிஎம்சி மருத்துவமனை கட்டிடம், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்து பின்னர் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்பது தொடர்பாக ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் – காந்தி தலைமையில் வாலாஜா சுங்கச்சாவடி அருகே திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து உற்சாக வரவேற்பு அளிப்பது.
மேலும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக அமையும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமூர்த்தி, என்.ராஜ்குமார், பொருளாளர் மு.கண்ணையன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சண்முகம், சேஷாவெங்கட், அக்ராவரம் முருகன், பெ.வடிவேலு, நகர செயலாளர்கள் பூங்காவனம் தில்லை உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






