என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Puja for Moolavar Shivalingam"

    • ஸ்ரீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சகாதேவசித்தர் கோவிலில் வைகாசி மாத பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் சந்தனம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பல வண்ண மலர்கள், அருகம்புல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் கிராம சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல அடுத்த கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் வைகாசி மாத பிரதோஷம் முன்னிட்டு கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. 

    ×