என் மலர்
நீங்கள் தேடியது "Decided to be attended by all road workers"
- 7-வது மாநிலமாநாட்டில்அனைத்து சாலை பணியாளர்களும் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
- பெரம்பலூரில் 25, 26-ந்தேதிகளில் நடக்கிறது
வாலாஜா:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற் குழு கூட்டம் ராணிப் பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார்.
உட்கோட்ட நிர்வாகிகள் எ.சோமு, எம்.பழனி, தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி பா.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் லோ.சிவசங்கரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், வருகிற 25,26-ந்தேதிகளில் பெரம்பலூரில் நடைபெறும் சாலை பணியாளர்களின் 7-வது மாநிலமாநாட்டில்அனைத்து சாலை பணியாளர்களும் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இதில் ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், நெமிலியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.






