என் மலர்
நீங்கள் தேடியது "குடிக்கு அடிமையாகி குடும்பத்தில் அடிக்கடி தகராறு"
- அடிக்கடி மனைவியிடம் தகராறு.
- குடும்பத்தினரை மிரட்ட விஷம் குடித்தார்.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 31) அவரது மனைவி நதியா (30)இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நித்தியானந்தம் குடிக்கு அடிமையாகி குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4-ந்தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ரகளை செய்த அவர் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர் பணம் தராததால் குடும்பத்தினரை மிரட்ட வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடிக்கப்போவதாக நாடகமாடினார். அப்போது திடீரென பூச்சி மருந்தை குடித்தார்.
அதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






