என் மலர்
ராணிப்பேட்டை
- விவசாயிகள் மகிழ்ச்சி
- டெல்டா பகுதியை விட அதிகமான நெல் கொள்முதல் செய்தது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் நெமிலி ரெட்டிவலம் ஆலப்பாக்கம் கன்னிகாபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி அதிகமாக செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு டெல்டா பகுதியை விட அதிகமான நெல் கொள்முதல் செய்தது வட மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்மழையின் காரணமாகவும் ஏரிகளில் நீர் உள்ளதாலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளதாலும்,
இந்தபோகம் விவசாயம் செய்த விவசாயிகள் அனைவரும் நெற்ப்பயிரில் அதிக மகசூல் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- வெற்றி நம் கைகளில் நிகழ்ச்சி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை சார்பில் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு சிந்தனையை வளர்த்துக்கொண்டு உள்ளத்தெளிவோடு தேர்வை எதிர்கொள்ள *வெற்றி நம் கைகளில்* நிகழ்ச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினருமான கௌதம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சிக்கு செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி பார்த்திபன் தலைமை வகித்தார். சாரண சாரணியர் திட்ட அலுவலர் ரஜினிப்பிரியா வரவேற்றார். அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனர் தேவ ஆசீர்வாதம், குளோ அறக்கட்டளை ஜேம்ஸ், சந்தர், தமிழாசிரியர்கள் விஜயகுமாரி, அலமேலு, கணித ஆசிரியர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பெருநிறுவன பயிற்சியாளரும், மனோதத்துவ நிபுணருமான *லயன் அமுதாமதியழகன்* மாணவிகளிடையே தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு சிந்தனையை தூண்டும் விதமாக பயிற்சியளித்தார்.
அறம் கல்விச்சங்க தலைவர் டாக்டர் கலைநேசன், பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுத்தேர்வெழுதும் 300 மாணவிகளுக்கும் தேர்வுக்கான உபகரணங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் செல்ப் அறக்கட்டளை காப்பாளர்கள் டாக்டர் கோகிலவாணிவேலாயுதம், எஸ்.அருண்குமார், அகாபே எஸ்.பிரதாப்குமார் ஆகியோர் கலந்துகொண்டவனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தோத்ராவதி நன்றி கூறினார்.
- குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா அடுத்த சென்னை சமுத்திரம் கிராம பெரிய தெருவில் வசித்து வந்தவர் மணி (வயது 67). இவர் நேற்று வாலாஜா பேட்டை அணைக்கட்டு ரோட்டில் வாலாஜாவை நோக்கி மோட்டார்சைக்கி ளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாப மாக இறந்து விட்டார்.
இது குறித்து வாலாஜா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஹூப்ளியில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத் தியபோது, அவர் ரவி (வயது 60) என்பதும் அரக்கோணம் என்று தெரிவித்துவிட்டு சுயநினைவை இழந்தார். பின்னர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.மாவட்ட சுகாதாரதுணை இயக்குனர் மணிமாறன் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் 15 வது நிதிக் குழுவின் கீழ் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தை திறந்து வைத்தும், நெமிலி பேரூராட்சி புன்னை கிராமத்தில் தேசிய நலவாழ்வு குழும நிதியின் கீழ் ரூ.48லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் கட்டடத்தின் கல்வெட்டினை திறந்து வைத்தும், 114 பிரிவு பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும்,
15 மாணாக்கர்களுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மூக்குக் கண்ணாடிகளையும், 20 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், 20 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் என மொத்தமாக 177 பயனாளிகளுக்கு ரூ.60 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
- வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்
- அரக்கோணத்தில் தகவல் பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அரக்கோணம்:
அரக்கோணம் நகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாரத பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய 'க்யூ ஆர் கோடு' தகவல் பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.
நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, நகரமன்ற துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் ஆகியோர் சாலையோர வியாபாரிகளுக்கு 'க்யூ ஆர் கோடு' தகவல் பலகையினை வழங்கினர்.
இதில் தி.மு.க. நகரமன்ற குழு தலைவர் துரை சீனிவாசன், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் உள்படசாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது
- மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு களித்து வருகின்றனர்
ராணிப்பேட்டை:
அரக்கோணம் இரட்டைக்கண் பாலம் அம்பேத்கர் ஆர்ச் எதிரில் எந்திர பறவைகளின் சரணாலய பொருட்காட்சி கடந்த 17-ந் தேதி தொடங்கப்பட்டது.
இக்கண்காட்சியை தினமும் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்து வருகின்றனர்.
இக்கண்காட்சியில் திகிலூட்டும் பேய் வீடு, சிறுவர்களின் விளையாட்டு உலகம், 3டி ஷோ, ராட்டினம், ஜுவல்லர்ஸ், விதவிதமான உணவு பண்டங்கள் அரங்கம் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தினமும் மாலை 5 மணிக்கு பொருட்காட்சி தொடங்கு கிறது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இக்கண் காட்சி நடைபெற உள்ளது.
- பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.
இதில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகராட்சி அலுவலர் மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், செந்தில்குமார், சாமுண்டீஸ்வரி,
கே.எம்.பி.பாபு, சங்கீதா, கங்காதரன், ரஷீதா, நந்தா தேவி, மல்லிகா, மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- டிஐஜி சாந்தி ஜெய்தேவ் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதை
- பல்வேறு பிரிவு வீரர்கள் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய பாதுகாப்பு பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும் பின்னர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய தொழிற்ப பாதுகாப்பு படை உதயமான நாளான இன்று இதற்கான விழா காலையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதல்வர் டிஐஜி சாந்தி ஜெய்தேவ் கலந்து கொண்டு அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் ஏற்றுக்கொண்டார். மேலும் இங்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பள்ளியில் பயிற்சி மேற்கொண்டு வரும் பல்வேறு பிரிவுகளான வீரர்கள் கலந்து கொண்டனர்.
- ஒரு வழி பாதையால் பயணிகள் கடும் அவதி
- பயணிகள் வலியுறுத்தல்
அரக்கோணம்:
தென்னக ரெயில்வே நிலையங்களில் அரக்கோணம் ரெயில் நிலையம் மிக முக்கியமானது.
இந்த ரெயில் நிலையத்தில் 7 நடைமேடைகளை உள்ளது.
ரெயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கான 2 மேம்பாலங்கள் உள்ளன.
2 முதல் 5-வது நடை மேடைகளுக்கு செல்ல இரு வழி நடைமேடை மேம்பாலம் உள்ளது.
இதில் ஒரு வழி பாதை பழுந்தடைந்துள்ளதால் அந்த பாதையை தற்போது மூடி உள்ளனர். ஒரு வழி பாதையே பயணிகள் பயன்படுத்தி வருவதால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நீண்ட நாட்கள் மூடி கிடந்த நிலையில் அதற்கான பணி நேற்று இரவு தொடங்கப்பட்டது. பயணிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகத்திற்கும், கல்லூரிக்கும் சென்று வருவதால் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு, கலவை ஆகிய இடங் களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப் பட்டு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆவணங்க ளில் குறைவு, முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம், நிலுவைத்தொகை அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை தவணை முறையில் செலுத்தி தங்களுடைய ஆவணங்களை உடன் பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு முனைப்பு இயக்க முகாம் ஆற்காடு சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது முகாமிற்கு ராணிப்பேட்டை துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்லையா தலைமை தாங்கினார்.
தனித்துணை கலெக்டர் (முத்திரை) ராமகிருஷ்ணன், மாவட்ட பதிவாளர் (நிர் வாகம்) வாணி, சார்பதிவாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு பதிவு கட்டணம் செலுத்தாத நபர்கள் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பெற்றுச் சென்றனர்.
- மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
- 40 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதிய ஊராட்சிமன்ற குழு அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தீட்டுகிற திட்டங்கள் அனைத்தையும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழிகாட்டுதலின்படி மற்றும் கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களின் ஆலோசனையின்படியும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று ஊரக வளர்ச்சித்துறையில் ராணிப்பேட்டை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ செய்ய அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ளுதல், அரக்கோணம் வட்டம், தணிகைபோளுர், வாணியம்பேட்டை, நாயும் கண்டிகை, இச்சிப்புத்தூர் ராகவேந்திரா நகர் பகுதிகளில் வாழும் சலவை தொழிலாளர் 40 குடும்பத்தினர்களுக்கு தணிகைபோளுர் நரிக்குறவர் வாழும் பகுதிக்கு அருகாமையிலும் மற்றும் வாணியம்பேட்டை ஊற்றுக்குட்டை அருகாமையில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.
அந்த இடத்தில் 40 குடும்பங்களுக்கு அரசு வழங்கும் வீட்டுமனை ஒதுக்கி பட்டா வழங்கியும், சலவை தொழில் செய்வதற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி, சலவை துறை, தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுக்க மாவட்ட வருவாய் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர் நாகராஜ், மாவட்ட ஊராட்சி செயலர் (பொறுப்பு) குமார், மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






