மகளிர் தின விழா கொண்டாட்டம்

பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்பு வழங்கினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மகளிர் தின விழா கொண்டாட்டம்
Published on

அரக்கோணம்:

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் ஒருங்கிணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.

இதில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், நகர மன்ற அவைத்தலைவர் துரை சீனிவாசன், நகராட்சி அலுவலர் மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், செந்தில்குமார், சாமுண்டீஸ்வரி,

கே.எம்.பி.பாபு, சங்கீதா, கங்காதரன், ரஷீதா, நந்தா தேவி, மல்லிகா, மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com