என் மலர்
ராணிப்பேட்டை
- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற் றுக்கு 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு மூடி வைக்கவேண்டும். என மதுவிலக்கு ஆயத்த தீர்வைத்துறை ஆணையர் தெரிவித் துள்ளார்.
மேலும் அந்நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ஓச்சேரி சாலையில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மின் அலங்கார சாதனங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பத்திரமாக வைத்து கொள்ள அறிவுரை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்கள் அதிக அளவில் உள்ளதாக அரசு விழாவில் அமைச்சர் பெருமக்களிடையே பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். உடனடியாக சிறப்பு முகாமை ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் நேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம் வள்ளுவம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் மொத்தம் 536 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாமிற்கு பொதுமக்கள் வருகை தந்தனர்.
அந்த முகாம் நடைபெறுவதை கலெக்டர் வளர்மதி நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது காலையில் இருந்து சுமார் 100 குடும்ப அட்டைதாரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களில் இதுவரை 65 குடும்ப அட்டைதாரர்களை பரிசோதித்ததில் 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு அடையாள அட்டை இல்லை என தெரிகிறது. பெரும்பான்மையான மக்கள் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வைத்துள்ளனர்.
அதையும் கொண்டு வந்து காண்பித்து உறுதி செய்து சென்றனர். மருத்துவ காப்பீடு அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உடனடியாக பதிவு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை நகல் உடனு க்குடன் வழங்கப்ப டுகிறது என தெரிவித்தனர். பொதுமக்கள் இந்த மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 இலட்சம் வருடந்தோறும் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெறுவதற்கு இந்த அடையாள அட்டை பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதை பத்திரமாக வைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நேற்றும் மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்கள் இந்த கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி அனைவர்களிடமும் அடையாள அட்டைகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய கலெக்டர் ச.வளர்மதி கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் தாரகேஸ்வரி, தாசில்தார் நடராஜன், மருத்துவ காப்பீட்டு அட்டை வாசுதேவன், வள்ளுவம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் சின்னப்பொண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வெயில் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள எச்சரிக்கை
- கலெக்டர் அறிவுரை
ராணிப்பேட்டை:
வெயில் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள அவசர வேலையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் வளர் மதி அறிவுறுத்தி உள் ளார்.
ராணிப்பேட்டைமாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில், கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிக ரித்து உள்ளது.
வெயில்காலங் களில் ஏற்படும் நோய்கள் அதாவது, தோல் எரிச்சல், சின்னம்மை, தட்டம்மை, வெப்ப பக்கவாதம், மயக்கம் போன்ற நோய்கள் தாக்ககூ டும். பொதுமக்கள் அனைவ ரும் கீழ்கண்ட வழிமுறை களை பின்பற்றி வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப அடிக்கடி நீர் பருகவேண்டும்.
பழங்கள், இளநீர், பழச்சாறு, மோர், ஓ.ஆர்.எஸ்.கரைசல் போன்ற நீர் ஆகாரங்களை அதிக அள வில் உட்கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது தவறாமல் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். வெளிர் காற்றோட்டமான பருத்தி உடைகளை அணிய வேண் டும். குடை, துண்டு பயன்ப டுத்த வேண்டும்.
வெயிலின் தாக்க அறிகுறி கள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மதி யம் 12 மணி முதல் 3 மணி வரை அவசர வேலையின்றி வெளியே செல்லக் கூடாது. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள், மற்றும் நாள் பட்ட நோய்பாதிப்பு உள்ள வர்கள் தேவையின்றி வெயி லில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேநீர், காபி, குளிர் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள் ளார்.
- வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை
- 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சியில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.
நகராட்சி துணை தலைவர் பழனி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை செய்யப்பட்டது.
கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அப்போது நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்கவோ, படம் பிடிக்க அனுமதிக்காத நகராட்சி ஆணையரை கண்டித்து காங்கிரஸ், அமமுக, பாமக சேர்ந்த 7 உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
தேர் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 25ம் தேதி முதல் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சாமிகள் ஊர்வலம் வந்தன.
இதில் விக்னேஸ்வரர் மூசிக வாகனம், அன்ன வாகனம்,சிம்ம வாகனம்,கற்பக விருட்ச காமதேனு வாகன சேனை,நாக வாகனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 31ம் தேதி திருக்கல்யாண ரிஷப வாகனம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பில் தேர் திருவிழா இன்று நடந்தது.தேர்ரானது கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு எம்.பி.டி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கர் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடையும்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் வாலாஜா தன்வந்திரி பீடம் டாக்டர் முரளிதர சாமிகள், சித்தஞ்சி மோகானந்த சாமிகள், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், தக்கார் சிவக்குமார், ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு,திமுக நகர செயலாளர் தில்லை, அதிமுக நகர செயலாளர் மோகன், காங்கிரஸ் நகர தலைவர் மணி ஊர் நாட்டாண்மை தாரர்கள்,கோவில் நிர்வாகிகள், வியாபாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள், வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இவனை தொடர்ந்து நாளை குதிரை வாகனம், 3-ம் தேதி அதிகார நந்தி சேனை, ராவணன் வாகனம், விடையாற்றி உற்சவம், 7-ம் தேதி மாவடி சேவை, 10ம் தேதி மஹா அபிஷேகம், இலட்சதீபம் ஆகியவை நடைபெற உள்ளது.
- பல்வேறு கலை நிகழ்சிகள் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த பிள்ளையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் மனோகுமார் வரவேற்றார்.
சோளிங்கர் வட்டாரக் கல்வி அலுவலர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.மா.கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் கருணகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் நிகழ்ச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன், கண்ணகி நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
- கதவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா அடுத்த கோவிந்தராஜபுரம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கஜேந்திரன் (வயது 32). தலங்கை ரெயில் நிலையத்தில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மனைவி, மகள்களுடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தூங்கி உள்ளார். காலையில் கீழே இறங்கி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது மேசை டிராயரில் அவர் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இது குறித்து வாலாஜா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
- வாலாஜாவில் நடந்தது
வாலாஜா:
தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒருங்கி ணைந்த மாநில நிர்வாகிகள் கூட்டம் வாலாஜாவில் நடை பெற்றது.
கூட்டத்தில் உள்ளாட்சியில் பணியாற்றும் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி பவர் பம்ப் இயக்குபவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
- ஓய்வு ஊதியம் கிடைக்க பரிந்துரை செய்யப்படும்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்ட பூசாரிகள் நல சங்க கூட்டம் வாலாஜா படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த 60 வயது நிரம்பிய பூசாரிகளுக்கு ஓய்வு ஊதிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
இந்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களில் கையொப்பங்கள் பெற்ற பின்னர் 2 விரைவில் அவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் வழங்கவும், அவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கவும் பரிந்துரை செய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் பூசாரி நல வாரியத்தில் உறுப்பினராக ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு அதற்கான அடை யாள அட்டை உடனடியாக வழங்கிட இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
- வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள மலைமேடு எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை ேசர்ந்தவர் குமார் (52). இவர் பெல் ஆன்சிலரி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.நேற்று கம்பெனியில் ஜாப் ஒர்க்குக்கு தேவைப்படும் பைப்புகள் வாங்கு வதற்கு சிப்காட் பேஸ் 3ல் உள்ள மெட்டல் கம்பெனிக்கு சென்றார்.
அங்கு வாங்கிய 4 பைப்களை டிராக்டரில் ஏற்றிவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக சென்றவர், அங்குள்ள ஆசிட் தொட்டியில் இறங்கியதாக கூறப்படுகிறது.இதனால் அவரது 2 கால்ககளும் முழங் கால் வரை கருகியது.
அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குயில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமையல் செய்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் வஉசி நகரில் வசிப்பவர் ராஜகோபால்.இவரது மகள் ரேவதி (32). பத்தாம் வகுப்பு வரை படித்தவர்.
இவருக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லை. இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. நேற்று முன்தினம் இரவு ரேவதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டாவில் திடீரென தீப்பிடித்தது.
இதில் உடல் முழுவதும் தீ பரவியது. பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






