search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு சிறப்பு முகாமை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • பத்திரமாக வைத்து கொள்ள அறிவுரை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்கள் அதிக அளவில் உள்ளதாக அரசு விழாவில் அமைச்சர் பெருமக்களிடையே பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். உடனடியாக சிறப்பு முகாமை ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டனர்.

    அதன் அடிப்படையில் நேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம் வள்ளுவம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் மொத்தம் 536 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாமிற்கு பொதுமக்கள் வருகை தந்தனர்.

    அந்த முகாம் நடைபெறுவதை கலெக்டர் வளர்மதி நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது காலையில் இருந்து சுமார் 100 குடும்ப அட்டைதாரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களில் இதுவரை 65 குடும்ப அட்டைதாரர்களை பரிசோதித்ததில் 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு அடையாள அட்டை இல்லை என தெரிகிறது. பெரும்பான்மையான மக்கள் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வைத்துள்ளனர்.

    அதையும் கொண்டு வந்து காண்பித்து உறுதி செய்து சென்றனர். மருத்துவ காப்பீடு அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உடனடியாக பதிவு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை நகல் உடனு க்குடன் வழங்கப்ப டுகிறது என தெரிவித்தனர். பொதுமக்கள் இந்த மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 இலட்சம் வருடந்தோறும் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெறுவதற்கு இந்த அடையாள அட்டை பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    இதை பத்திரமாக வைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நேற்றும் மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்கள் இந்த கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி அனைவர்களிடமும் அடையாள அட்டைகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய கலெக்டர் ச.வளர்மதி கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் தாரகேஸ்வரி, தாசில்தார் நடராஜன், மருத்துவ காப்பீட்டு அட்டை வாசுதேவன், வள்ளுவம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் சின்னப்பொண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×