மின் விளக்கு அலங்கார கடையில் தீ விபத்து

ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் போலீசார் விசாரணை
கடையில் பற்றி எரிந்த தீ.
கடையில் பற்றி எரிந்த தீ.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் ஓச்சேரி சாலையில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து மள மளவென எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மின் அலங்கார சாதனங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com