என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The young girl was burnt to death in the fire"

    • சமையல் செய்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் வஉசி நகரில் வசிப்பவர் ராஜகோபால்.இவரது மகள் ரேவதி (32). பத்தாம் வகுப்பு வரை படித்தவர்.

    இவருக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லை. இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. நேற்று முன்தினம் இரவு ரேவதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டாவில் திடீரென தீப்பிடித்தது.

    இதில் உடல் முழுவதும் தீ பரவியது. பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு வாலாஜா அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×