என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆர்.புதுப்பட்டிணத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீகாமட்சியம்மன், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட திருக்கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்றன.

    இதையடுத்து இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 17 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து  ஐந்து கால யாக பூஜை, ஆறாம்கால பூஜை நடைபெற்றது.

    கடம் புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனைத்தொடர்ந்து சிவஸ்ரீ பிச்சைகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் ஆர்.புதுப்பட்டிணம், முத்துக்குடா, மீமிசல், கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், பகுதியைச் சுற்றியுள்ள பொது மக்கள்  கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    பொன்னமராவதி அருகே கால்நடைகளுக்கான சிறப்பு முகாமில் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சி செவலூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    அதில் இலுப்பூர் கோட்ட உதவி இயக்குனர் பாண்டி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    சண்முகநாதன் பிரகானந்தன் கால்நடை ஆய்வாளர் தயானந்தராவ், முத்துக்குமார் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சோலை மணி, முருகன், சாந்தி ஆகியோர் முகாமில் பங்கேற்றனர்.

    இதில் அப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து முகாமிற்க்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சினை ஊசி, சினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.   

    முகாமில் செவலூர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா முத்துக்குமார், துணை தலைவர் சங்கர், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர்.

    பொன்னமராவதி அருகே சிறுதானிய உணவுத்திருவிழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமாராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் சிறுதானிய உணவு போட்டி மற்றும் உணவுத்திருவிழா நடந்தது.

    கண்டியாநத்தம் ஊராட்சி மகளிர் குழுக் கூட்டமைப்பு சார்பில் மகளிர் குழு பெண்களுக்கு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய உணவு தயாரித்து அதில் சிறந்ததை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது.

    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சுபத்ரா, ஆசிரியர் கீதா, அங்கன்வாடி பணியாளர் ராசாத்தி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறுதானியம் மூலம் தயாரிக்கப்பட்டவர்களிடம் உணவு மகிமை அதன் பயன் குறித்தும் விளக்கம் பெற்றனர்.

    இதனைத் தொடர்ந்து இதில் மூன்று பேர் சிறந்த சிறுதானிய உணவு தயாரித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சித்தலைவர் செல்வி முருகேசன், ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி, ஊராட்சி செயலாளர் அழகப்பன், குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜோதிமணி அழகம்மாள், சாந்தகுமாரி, சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    அறந்தாங்கியில் 5 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே காந்தி பூங்கா சாலையில் அதே பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் ஓட்டலும், ஆயிங்குடியை சேர்ந்த பாலமுருகன் செல்போன் பழுது நீக்கும் கடையும், இலுப்பூர் விலாப்பட்டியை சேர்ந்த அண்ணாமலை பிளாஸ்டிக் பொருட்கள் கடையும், அரசர்குளத்தை சேர்ந்த ரியாஸ் வாட்ச் கடையும், சரவணன் என்பவர் நகைகள் அடகு பிடிக்கும் கடையும் வைத்து நடத்தி வருகின்றனர்.

     இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஓட்டலின் பின்புறத்தில் இருந்து திடீரென தீப்பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்துள்ள மற்ற 4 கடைகளுக்கும் வேகமாக பரவியது. அதிகாலை நேரம் என்பதால் இதனை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

     அதன்பேரில், அறந்தாங்கி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க கடும் முயற்சி செய்தனர். இருந்தாலும் தீ கட்டுக்குள் வராததால் கீரமங்கலம், ஆவுடையார்கோவில் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இருந்தாலும், மேற்கண்ட 5 கடைகளிலும் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளுக்கு யாரும் தீ வைத்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இடையபட்டியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 27). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர்.

    நாகலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால் கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை தின்று விட்டு மயங்கி கிடந்தார்.
    இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நாகலட்சுமி உயிரிழந்தார்.

    இந்தநிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் தந்தை விராலிமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத் தில் புதுக்கோட்டை நகராட் சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ.க. தே.மு.தி.க. மக்கள் நீதி மய்யம், பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 282 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதே போல அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 128 பேர் களத்தில் உள்ளனர், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், கறம்பக்குடி, கீரனூர், பொன்னமராவதி ஆகிய 6 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில்கவுன் சிலர் பதவிக்கும் இலுப்பூர், கீரமங்கலம் ஆகிய பேரூராட்சியில் தலா 14 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் மொத்தம் 492 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதற்காக 278 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த 19 ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    அதில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 27 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

    இதே போல் அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அதிக இடங்களில் தி.மு.க.வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது.

     6 பேரூராட்சிகளில் அன்னவாசல் தவிர மற்ற 5 பேரூராட்சிகளில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளர் முகம்மது இப்ராம்சா ஒரு வாக்குகள் கூட பெறவில்லை.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளர் முகம்மது இப்ராம்சா  ஒரு வாக்குகள்  கூட பெறவில்லை.

    இந்த வார்டில் பதிவான 463 வாக்குகளில் ஒரு வாக்கு கூட அ.தி.மு.க. வேட்பாளருக்கு கிடைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன் முதலில் தேர்தல் களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    இத்தேர்தலில் முதன் முதலில் தேர்தல் களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    புதுக்கோட்டை நகராட்சியில் 4-வது வார்டில் மொத்தம் பதிவான 1,059 ஓட்டுகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முகம்மது பர்வேஸ் 47 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் 265 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 203 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    ஆலங்குடி கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் உள்ள  முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடைபெற்றது. 

    ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நேற்று   ஞாயிற்றுக் கிழமை இரவு நடைபெற்றது. சிங்கவள நாட்டை சேர்ந்த கிராமங்களிலிருந்து பூக்கள் கொண்டு அதை அம்மன் சன்னதியில் கொட்டி வைத்தனர். 

    பின்னர் அந்த பூக்களை சப்பர  வண்டியில் ஏற்றி நான்கு வீதிகளையும் சுற்றி வந்தது. சப்பர வாகனம் கோவில் சன்னதி வந்ததும் மீண்டும் எல்லா பூக்களையும் அம்மன் சன்னதியில் கொட்டி வைத்தனர். 

    பின்னர் அம்பாளுக்கு பூசாரிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து  மிராஸ்தாரர்களால் பொதுமக்கள் முன்னிலையில் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடை பெற்றது. 

    பூச்சொரிதல் விழாவைத் தொடர்ந்து  அம்பாளுக்கு சாற்றப்பட்ட பூக்கள் கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது
    புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் முடிவடைந்தது. இதைதையடுத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில்   அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்  மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் தெரிவித் ததாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் பதிவான வாக்குகளில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்       மையங்களில் 22.02.2022 அன்று எண்ணப்படவுள்ளது.

    மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய    காவலர்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

    பார்வையாளர் பதிவேட்டில் பதிவு செய்துள்ளது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் அனைத்து நிகழ்வுகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஒவ்வொரு மேஜையும் கண்காணிக்கப்படவுள்ளது.

    வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சுற்றின்முடிவிலும் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 10 மேஜைகள் மூலம் 5 சுற்றுகளாகவும், ஒவ்வொரு பேரூராட்சியும் ஒரு மேஜையின் மூலம், கறம்பக்குடி 16 சுற்றுகளாகவும், இலுப்பூர் மற்றும் கீரமங்கலம் 14 சுற்று களாகவும், மற்றவை 15 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளது. 

    மேலும் அறந்தாங்கி நகராட்சி 5 மேஜைகள் மூலம் 8 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    அறந்தாங்கி அருகே மண்டிக்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அருள்பாலித்து வரும் மண்டிக்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. 

    பணிகள் நிறைவடைந்த நிலையில்  ஆலங்குடி,  ஊர்வணி, பாக்குடி, பஞ்சாத்தி மற்றும் அறந்தாங்கி நகர மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. 

    இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 16-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அன்று மாலை முதற்கால யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான இன்று நான்காம் கால யாகபூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. 

    அதனைத்தொடர்ந்து சிவ ஸ்ரீ முத்துச்சாமி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குடி  ஊர்வணி, பாக்குடி, பஞ்சாத்தி மற்றும் அறந்தாங்கி நகர பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    ஆலங்குடியில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில்  உள்ள கல்லாலங்குடி  நடேசன் நகரில் உள்ள  அருள்விநாயகர் கோவிலில் 12ம்  ஆண்டு வருடாபிஷேக  விழா  நடை பெற்றது. 

    விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப் பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டது.  யாகசாலையில் 108 சங்காபிஷேகம் நடை பெற்றது. பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள அருள் விநாயகருக்கு சந்தனம், தயிர் மற்றும் பால் போன்ற 16 வகை அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது
     
    இதைப்போல் தா.பேட்டையில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் உள்ள ஸ்ரீராஜகணபதிக்கு மாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், தேன், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம்,  உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. 

    பின்னர் ராஜகணபதி மலர்களால் அலங்கரிக்கப் பட்டு தீபாரதனைநடை பெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
    ×