என் மலர்
புதுக்கோட்டை
ஆலங்குடி சேந்தன்குடி அரசு பள்ளி வளாகத்தில் 3 மாணவர்களை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ &மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வளாகத்திற்குள் புகுந்த நாய் 6ம் வகுப்பு சபரி வயது11, 7ம் வகுப்பு சிவராகுல் 12, 8வகுப்பு புனிதன் 13 ஆகிய 3 மாணவர்களை கடித்துள்ளது.இதனால் மாணவர்கள் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த ஆசிரியர்கள் அந்த நாயை விரட்டி விட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீரமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிகிச்சை அளித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் சேந்தன்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் வந்துநடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு இனி மேல் இது போல் அசம்பா விதங்களை தடுக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
சேந்தன்குடி அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்திற்குள் அதிக அளவிலான நாய்கள் சுற்றித்திரிவதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை பற்றிய பயிற்சி கல்லூரி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் தொடக்கப் பள்ளியில், குடுமியான் மலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளிக்கப் பட்டது.
இப்பயிற்சியில் வீட்டு தோட்டம் அமைத்தல் , விதைப்பந்து தயாரித்தல், வீடு காய்கறி திட்டம் , தொழு உரம் தயாரிப்பு , பூச்சிகளை அழிப்பதற்கான பூச்சிக் கொல்லிகளை இயற்கை முறையில் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவிகள் வழங்கிய பயிற்சியை ஆர்வமுடன் கற்றுக் கொண்டு அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலும் அளித்தனர். நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, -மாணவிகள் கலந்து கொண்டனர்.
சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
தொடக்கமாக யாக பூஜைகள் நடைபெற்று, கால பைரவருக்கு பால், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராம.சேதுபதி, பி.பாஸ்கர் மற்றும் தேய்பிறை அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தரமற்ற சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுரில் முல்லை நகரிலிருந்து 1200 மீட்டரில் ரூ.40லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது. சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தகாரர் சோத்துபாளை முருகேசன் என்பவர் மேற்க் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெருங்களுர் ஊராட்சியில் முல்லை நகரிலிருந்து காட்டுபட்டி வரையிலான சாலை அமைக்கும் பணி அரசு விதித்துள்ளப்படி தரமாக அமைக்கபடாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி தரமான சாலையை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப்பட்டி, மேட்டுபட்டி, கூத்தாச்சிபட்டி என பல கிராம மக்கள் 5000 மேல் பயன்படுத்தி வரும் சாலையை தரமானதாக அமைக்க வேண்டும். பெயரளவில் போடப்படும் சாலையால் எந்த பயனும் இல்லை. விரைவிலேயே சாலை காணாமல் போய்விடும்.
அதிகாரிகளிடம் கூறியும் யாரும் வந்து பார்க்கவில்லை. எனவே தரமான சாலை அமைக்கும் வரை இதுபோன்ற சாலை அமைக்கும் பணியை செய்ய விடமாட்டோம் என அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.
சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் தெரிந்து போலிசார் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத் தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது,
மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1,67,490 குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஊரகப் பகுதிகளில் 1,309 மையங்களும், நகரப் பகுதிகளில் 47 மையங்களும் என மொத்தம் 1,356 மையங்களில் 1,67,490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கென பொதுசுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 5,377 பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 0 முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதுடன் ‘இளம்பிள்ளைவாத நோயை ஒழித்து இளம்பிள்ளைவாத நோய் இல்லா உலகம் படைக்க” அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, ஊரக நலப்ப ணிகள் இணை இயக்குநர் ராமு, துணை இயக்குநர்கள் அர்ஜுன்குமார், கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேருந்து வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல் நடத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை மார்க்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

விசைப்படகை சரிசெய்வதற்காக கடலில் குதித்த மீனவர் பிணமாக மீட்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினமும் 200க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
இது போல் மீன்பிடித் தொழிலுக்கு செல்லுகின்ற விசைப்படகுகளை, வேலை முடிந்ததும், துறைமுகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில், கடலில் நங்கூரமிட்டு கட்டி நிறுத்திவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஷாலினி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சுந்தரபாலு மற்றும் 2 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகியுள்ளனர்.
அப்போது படகின் அடியில் நங்கூரக்கயிறு, வலை போன்ற ஏதேனும் பொருட்கள் சிக்கியுள்ளதா என்பதை பார்ப்பதற்காக மீனவர் சுந்தரபால் நீரில் குதித்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததை அறிந்த சக மீனவர்கள் சந்தேகமடைந்து கடலில் குதித்து தேடியுள்ளனர்.
ஆனால் மீனவர் சுந்தரபால் கிடைக்கவில்லை. அதனையடுத்து கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று மாலை முதல் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
தொடர்ந்து சக மீனவர்கள், கடலோர காவல்படையினர் ஆகியோர் தேடி வந்த நிலையில், மாயமான மீனவர் சுந்தரபால் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சபம்வம் குறித்து வந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரபால் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கந்தர்வக்கோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது.
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 25&ந்தேதி மாதாந்திரமின் பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும்
ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டகுலம், மணவிடுதி, சொக்கநாதபட்டி, சோத்துப் பாளை, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி,
மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான் பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி,
மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, மெய்குடி பட்டி, வெள்ளாள விடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை கந்தர்வகோட்டை மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சியில் இருந்து மணவாத்திப்பட்டிக்கு செல்லும் சாலையில் காட்டுப்பட்டி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்தநிலையில் பெருங்களூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் (வயது 28) என்பவர் புதுக்கோட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
மேட்டுப்பட்டி செல்வராசு மகன் ராஜா (31) கொத்தனாராக வேலை பார்த்து வருகின்றார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த டாஸ்மாக் கடையில் சம்பவத்தன்று மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது பெங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பள்ளி முடிந்த பின் மாலையில் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மது அருந்தி கொண்டிருந்த விக்னேசும், ராஜாவும் சேர்ந்து அந்த மாணவிகளிடம் பாலியல் தொடர்பான சீண்டலில் ஈடுபட்டனர். மாணவிகள் சத்தம் போடவே அவர்களை விட்டுவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விக்னேஷ், ராஜாவை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இரு இளைஞர்களையும் ஆதனக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் ரவி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
துக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கீழநெம்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்த விஷ்ணுராஜ் (வயது 21).
இவர் அடியாட்களை ஏவி வாலிபர் ஒருவரை தாக்கியது தொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் பரிந்துரை செய்தார்.
அதன்படி விஷ்ணுராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கடைவீதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கந்தர்வகோட்டை கடைவீதி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக்கழிவுகள் மலை போல் குவிந்துள்ளதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதியடைகின்றனர்.
கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் கந்தர்வகோட்டை கடை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் மலை போல் குவிகிறது. இதனால் வாகனங்களில் பயணம் செய்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும் தூய்மை காவலர்கள் குப்பை வண்டியில் சேகரித்து வேறுஇடத்தில் பிளாஸ்டிக் பைகளை கொட்டினாலும், காற்றின் வேகத்தில் குப்பைகள் மீண்டும் சாலைகளில் பறக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. மேலும், கழிவுநீர்கால் வாய்களில் தற்காலிக அடைப்புகளை ஏற்படுத்துகிறது.
இதனால் சுகாதாரக்கேடும், நோய்த்தொற்றும் அபாயம் ஏற்படுகிறது. அரசால் தடை செய்யப் பட்ட பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி மீண்டும் துணி பை மற்றும் சணல் பைகளை பயன் படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கந்தர்வகோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
திருவாரூர் மாவட்டம் கோவிலூர் பகுதியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சார்பில், சமீபத்தில் இறந்து ஒரு நிர்வாகியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவர் கே.கே செல்வகுமார் தலைமையில் இன்று ஊர்வலமாக சென்று அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர்.
அதனை அறிந்த, திருச்சி மாநகர போலீசார், திருவாரூர் மாவட்டத்திற்கு கே.கே செல்வகுமார் செல்லக்கூடாது என்பதற்காக இன்று காலை ராம்ஜி நகர் கொத்தமங்கலம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற அவரை வெளியே செல்ல விடாமல் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
இதனை கண்டிக்கும் விதமாக கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே வீரமுத்தரையர் சங்கம் சார்பில் அதன் பொறுப்பாளர் வீரமணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.