என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கோவிலூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்து மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் முன் உள்ள கீழ ரதவீதியில் மின்விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர் நிறுத்தப்பட்டிருந்தது.

    பின்னர் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியை சிவாச்சாரியார்களும், ஊர் முக்கியஸ்தர்களும் சேர்ந்து தோளில் தூக்கி வந்து தேரில் வைத்தனர். அதனைத்தொடர்ந்து உற்சவருக்கு மாலைகள் அணிவித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது செங்கவளநாட்டு கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்கள் தேர்வடத்தை பிடித்து இழுத்தனர்.

    தெற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதி வழியாக சென்றபோது ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேல ரத வீதி வழியாக வான வேடிக்கைகளுடன் தேர் இழுத்து வரப்பட்டது

    தேரோட்டம் காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



    பஸ் டயர் வெடித்து பெண் பயணி காயமடைந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் கள்ளி யடிப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சித்ரா ( வயது 26). கறம்பக்குடியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வரும் இவர்,

    வேலைக்கு செல்வதற்காக ரெகுநாதபுரத்தில் இரு ந்து தனியார் பஸ்சில் கறம்பக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.
    மைலன் கோன்பட்டி அருகே வந்தபோது திடீ ரென பஸ்சின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    அப்போது டயர் அமைந்துள்ள பகுதியின் மேற்பரப்பின் தகரம் பெயர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த சித்ரா மீது விழுந்தது. இதில், அவர் படு காயம் அடைந்தார்.

    சக பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், கறம்பக்குடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவிவை முன்னி ட்டு பொங்கல் விழா நடை பெற்றது. 

    கடந்த 20ம் தேதி முத்துமாரியம்மனுக்கு  பூச்சொரிதல் விழாவும், அதனை தொடர்ந்து தினந்தோறும் மண்டகப் படிகளில் கலைநிகழ்ச்சிகளும் நடை பெற்றது. 

    9ம் நாளானநேற்று பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் கோவில் வாசலில் பொங்கல் வைக்கப் பட்டு விழா கொண்டாடப்பட்டது. 

    பக்தர்கள் பால்குடம் எடுத்தும், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் கட்டியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கந்தர்வக்கோட்டையில் மாணவர்களுக்கான திறனறித்தேர்வு நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு முழுவதும் அறிவியல்  இயக்கம்  சார்பில் துளிர் திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வகோட்டை வட்டார வளமையம், அக்கட்சிபட்டி, காட்டு நாவல், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் வெள்ளாளவிடுதி உயர்நிலை பள்ளிகளில் துளிர் திறனறித்தேர்வு நடை பெற்றது.

    இந்த தேர்வில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்ட செயலா ளர் முத்துகுமார், கந்தர்வகோட்டை வட்டாரதலைவர் ரகமதுல்லா, செயலாளர் சின்னராஜா, தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.  

    தேர்வு  குறித்து  மாணவர்கள் கூறியபோது,  சிந்திக்கும் வகை வினாக்கள் அதிகம் இடம் பெற்றுள்ளது  என்றும், பொது அறிவு,  கணிதம், அறிவியல் தொழில் நுட்ப கேள்வி எளிமையாக இருந்த தாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதால் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

    விராலிமலை அருகே கிடையில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 17 செம்மறி ஆடுகள் பலியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மதயானைபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் விராலிமலை அருகே புதுவயல் கிராமத்தில் கிடை அமைத்து சுமார் 60&க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின்னர் அடைத்து வைத்து இருந்தார்.

    இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு தெரு நாய்கள் கிடையின் உள்ளே புகுந்து ஆடுகளை கடித்து குதறி உள்ளது.

    ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து கிடைக்குள் பார்த்தபோது 2 நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டு இருந்துள்ளது.

    நாய்களை துரத்தி விட்டு கிடையின் உள்ளே சென்று பார்த்தபோது 17 செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.

    நாய்கள் ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் ஆட்டின் உரிமையாளர் குடும்பத்தின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உறவினர்களிடம் கலெக்டர் ஒப்படைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி கள ஆய்வின்போது அழியாநிலை  கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் மனநல காப்பகம் கண்டறியப்பட்டது.  பின்னர் அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சரவணன் என்பவரும் ஒருவர். புதுக்கோட்டை அரசு மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அவருக்கு  ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் அளிக்கபட்டதன் பயனாக குணமடைந்த சரவணன் தனது அண்ணனின் அலைபேசி எண்ணை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து  சரவணன் திருப்பூர் மாவட்டம் அங்கயர்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

    உடனே அவர்களை புதுக்கோட்டைக்கு வரவழைத்தனர். இதனை அடுத்து கலெக்டர் கவிதா ராமு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் சரவணனுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையை தொடர அறிவுறுத்தி, அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.
    புதுக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று 27-ந்தேதி  5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். 

    நிகழ்ச்சிக்கு  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வினை இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். 

    அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து வழங்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

    அதனடிப்படையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,309 மையங்களும், நகரப் பகுதிகளில் 47 மையங்களும் என மொத்தம் 1,356 மையங்களில் 1,67,490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

    இப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கென பொதுசுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, 

    தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 5,377 பணியாளர்கள்,  87 வாகனங்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   

    மேலும் ஏதேனும் குழந்தைகள் விடுபட்டிருந்தால் கூட நாளையும் நாளை மறுநாள் வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது  என்றார்.

    நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, பொதுசுகாதாரத் துணை இயக்குநர் அர்ஜுன்குமார், நகராட்சி ஆணையர் நாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் நைனாமுகமது மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
    கந்தர்வக்கோட்டையில் மக்களை தேடி மருத்துவமுகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சி  கெண்டையம்பட்டியில் தமிழக முதல்வரின் மக்களை தேடி மருத்துவ முகாம் ஒன்றியகுழு உறுப்பினர் திருப்பதி முன்னிலையில் நடை பெற்றது. 

    முகாமில் துவார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமாறன், வெல்லாலவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரஞ்சித் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கொண்டகுழு  

    நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். 

    முகாம் ஏற்பாடுகளை கிராம சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

    மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் 64 ஆ ம் ஆண்டு முனீஸ்வரர் கோவில் ஆலய மாசிமக விழாவையொட்டி ஜல்லி க்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்தாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கிவைத்தனர்.
    இதில் திருச்சி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை தஞ் சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 700 காளைகளை 300 மாடு பிடி வீரர்கள் சந்தித்தனர்.

    மாவட்ட வருவாய்த்துறை செல்வி, வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை, சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ம ற்றும் மருத்துவ குழுவினர் தீயணைப்புத்துறையினர் விழா கமிட்டியினர் செல் வம், கார்த்திக், வடிவேல்  மேற்பார்வையில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த துவார் உயர் நிலைப்பள்ளி மற்றும் கெண்டையம்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்டம் துவங்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    2016-2017ம்  கல்வியாண்டு முதல் பள்ளி பரிமாற்று திட்டம் அனைத்து  மாவட்டங்களிலும் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது.  கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளி களுடன் இணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 

    பரிமாற்று பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி இணைப்பு  பள்ளிகளில் வசதிகள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப் பயணமாக   அப்பள்ளியை சுற்றியுள்ள வளங்கள் பல்வேறு இயற்கை சூழல்கள் அலுவலகங்கள் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள்மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் வகையில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. 

    அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்ததுவார் உயர்நிலைப் பள்ளிமற்றும் கெண்டையம்பட்டி நடு நிலைப்பள்ளியில்   பள்ளி பரிமாற்று  திட்டம்  ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி ஆகியோர் தலைமையில்  துவங்கப்பட்டது. 

    இதில்  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் பரிசு வழங்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் பரவலாக கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட வைரஸ் நோய் பரவி வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காராவயல் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்கான தடுப்பூசி, செய ற்கை கருவூட்டல், எதிர்ப்பு மருந்துகள் ஆகியன வழங்கப்பட்டன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு மருத்துவ வசதி பெற்று பயனடைந்தனர். மேலும் மருத்துவ வசதி பெற்ற கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மருத்துவ நிர்வாகம் சார்பில் தாம்பூலம் கொடுத்து ஊக்கு விக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன், கூட்ட மைப்பு தலைவர் மணிமொ ழியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நல்ல தம்பி, சுமதிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் மலர்விழி காளிதாஸ், தி.மு.க. கிளைச் செயலாளர் சக்திராஜன்  மற்றும் கால்நடை மருத்து வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கால்நடை மருத் துவர் உதயபெருமாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தி ருந்தார்.
    தனி ரெயில் மூலம் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு வந்த, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஸ்அகர்வால் இருப்புபாதைகள் குறித்தும், ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்க்கொண்டார்.
    அறந்தாங்கி:

    கடந்த 1902-ம் ஆண்டு முதல் காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் வரை மீட்டர் கேஜ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் சென்னை வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியிலுள்ள வணிகர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரெயில் பாதை அமைப்பதற்க்கான பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அகல ரெயில் பாதை பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு முடிக்கப்பட்டு ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

    வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்ட ரெயில் சேவையானது கொரோனா காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் திருவாரூர், காரைக்குடி அதிவிரைவு ரெயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனி ரெயில் மூலம் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு வந்த, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஸ்அகர்வால் இருப்புபாதைகள் குறித்தும், ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்க்கொண்டார்.

    அப்போது ரெயில் உபயோகிப்பாளர்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில் பழைய முறைப்படி அறந்தாங்கி வழியாக சென்னைக்கு நேரடியாக ரெயில் வசதிகள் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

    கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோட்ட மேலாளர், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும், அதுவரை சென்னைக்கு செல்லும் ரெயிலை தொடரும் வகையில், அறந்தாங்கி மார்க்கமாக வரும் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்படும் என மனு அளித்தவர்களிடம் தெரிவித்தார்.

    ×