என் மலர்
உள்ளூர் செய்திகள்

விராலிமலை அருகே கிடைக்குள் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்த செம்மறி ஆடுகள்.
ஆடுகள் கடித்து குதறியதில் 17 செம்மறி ஆடுகள் பலி
விராலிமலை அருகே கிடையில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 17 செம்மறி ஆடுகள் பலியானது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மதயானைபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் விராலிமலை அருகே புதுவயல் கிராமத்தில் கிடை அமைத்து சுமார் 60&க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு பின்னர் அடைத்து வைத்து இருந்தார்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு தெரு நாய்கள் கிடையின் உள்ளே புகுந்து ஆடுகளை கடித்து குதறி உள்ளது.
ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து கிடைக்குள் பார்த்தபோது 2 நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டு இருந்துள்ளது.
நாய்களை துரத்தி விட்டு கிடையின் உள்ளே சென்று பார்த்தபோது 17 செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.
நாய்கள் ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் ஆட்டின் உரிமையாளர் குடும்பத்தின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story