என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கந்தர்வக்கோட்டையில் மருத்துவமுகாம்

    கந்தர்வக்கோட்டையில் மக்களை தேடி மருத்துவமுகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சி  கெண்டையம்பட்டியில் தமிழக முதல்வரின் மக்களை தேடி மருத்துவ முகாம் ஒன்றியகுழு உறுப்பினர் திருப்பதி முன்னிலையில் நடை பெற்றது. 

    முகாமில் துவார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமாறன், வெல்லாலவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரஞ்சித் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கொண்டகுழு  

    நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். 

    முகாம் ஏற்பாடுகளை கிராம சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

    Next Story
    ×