என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி பரிமாற்ற திட்டம் தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்
பள்ளி பரிமாற்ற திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த துவார் உயர் நிலைப்பள்ளி மற்றும் கெண்டையம்பட்டி நடுநிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்டம் துவங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
2016-2017ம் கல்வியாண்டு முதல் பள்ளி பரிமாற்று திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது. கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளி களுடன் இணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பரிமாற்று பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி இணைப்பு பள்ளிகளில் வசதிகள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப் பயணமாக அப்பள்ளியை சுற்றியுள்ள வளங்கள் பல்வேறு இயற்கை சூழல்கள் அலுவலகங்கள் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள்மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் வகையில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்ததுவார் உயர்நிலைப் பள்ளிமற்றும் கெண்டையம்பட்டி நடு நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்டம் ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி ஆகியோர் தலைமையில் துவங்கப்பட்டது.
இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story






