என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பஸ் டயர் வெடித்து பெண் பயணி காயம்

    பஸ் டயர் வெடித்து பெண் பயணி காயமடைந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் கள்ளி யடிப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சித்ரா ( வயது 26). கறம்பக்குடியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வரும் இவர்,

    வேலைக்கு செல்வதற்காக ரெகுநாதபுரத்தில் இரு ந்து தனியார் பஸ்சில் கறம்பக்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.
    மைலன் கோன்பட்டி அருகே வந்தபோது திடீ ரென பஸ்சின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    அப்போது டயர் அமைந்துள்ள பகுதியின் மேற்பரப்பின் தகரம் பெயர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த சித்ரா மீது விழுந்தது. இதில், அவர் படு காயம் அடைந்தார்.

    சக பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், கறம்பக்குடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×