என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் சாலை மறியல் செய்தபோது எடுத்தப்படம்.
    X
    மாணவர்கள் சாலை மறியல் செய்தபோது எடுத்தப்படம்.

    மாணவர்கள் சாலை மறியல்

    பேருந்து வசதி கோரி மாணவர்கள் சாலை மறியல் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை மார்க்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×