என் மலர்
உள்ளூர் செய்திகள்

காலபைரவருக்கு வடைமாலை சார்த்தப்பட்ட காட்சி.
சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
தொடக்கமாக யாக பூஜைகள் நடைபெற்று, கால பைரவருக்கு பால், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராம.சேதுபதி, பி.பாஸ்கர் மற்றும் தேய்பிறை அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story






