என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
    X
    பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்.

    பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி

    பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை பற்றிய பயிற்சி கல்லூரி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது.

     புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் தொடக்கப் பள்ளியில், குடுமியான் மலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளிக்கப் பட்டது.

    இப்பயிற்சியில் வீட்டு தோட்டம் அமைத்தல் , விதைப்பந்து தயாரித்தல், வீடு காய்கறி திட்டம் , தொழு உரம் தயாரிப்பு , பூச்சிகளை அழிப்பதற்கான பூச்சிக் கொல்லிகளை இயற்கை முறையில் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள்  அளிக்கப்பட்டது. 

    பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவிகள் வழங்கிய பயிற்சியை ஆர்வமுடன் கற்றுக் கொண்டு அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலும் அளித்தனர். நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரபாகரன் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, -மாணவிகள்  கலந்து கொண்டனர்.
    Next Story
    ×